Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
Exclusive: இந்திய பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் ஏன் அதிகமாக இருக்கிறது? விளக்கும் டாக்டர் வேத பத்மபிரியா
Breast Cancer Awareness Month 2024: இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், பெண்கள் மத்தியில் காணப்படும் புற்றுநோய்களுள் மார்பக புற்றுநோய் மிக அதிக விகிதத்தில் இருப்பது மிக முக்கியமானதாகவும், கவலையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது, பெண்களுடன் ஒப்பிடுகையில் அரிதானதாகும்; ஹார்மோன் அளவுகளிலும் மற்றும் மார்பகத்தின் கட்டமைப்பிலும் உள்ள வேறுபாடுகளின் காரணமாக ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் நினைவுகூரப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் குறிக்கோள், மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதும், முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை முறைகளைப் பற்றி மக்களுக்கு தெரிய வைப்பதாகும். இப்படிப்பட்ட மார்பக புற்றுநோய் எந்த காரணங்களுக்கு எல்லாம் பெண்களுக்கு வரலாம் என்பது குறித்து எம்ஜிஎம் புற்றுநோய் நிறுவனத்தின் மார்பக புற்றுநோயியலின் முதுநிலை ஆலோசகரான டாக்டர் வேத பத்ம பிரியா அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மார்பக புற்றுநோய் எதனால் வருகிறது?
மார்பக புற்றுநோய் வருவதற்கு துல்லியமான காரணங்கள் என்ன என்ற கேள்விக்கு தெளிவான, உறுதியான பதில் ஏதும் இல்லை என்று கூறும் டாக்டர் பத்ம பிரியா, மார்பக புற்றுநோய் உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கக் கூடிய பல காரணிகள் இருப்பதாக கூறினார். அந்த காரணிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த காரணிகளுள் மரபணுவியல், ஹார்மோன்களின் தாக்கம், வாழ்க்கை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வெளிப்படுதல் ஆகியவை முக்கியமானவை. எனவே, மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் மற்றும் அதற்கு முறையான சிகிச்சை பெறுவதற்கும் அவை பற்றி சரியாக அறிந்திருப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியமாகும்.
மெனோபாஸ்
பெரும்பாலான மார்பக புற்றுநோய் நிகழ்வுகள் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் அதாவது, மெனோபாஸ் நிலையிலுள்ள (மாதவிடாய் நின்றுவிட்ட) பெண்களிடமே கண்டறியப்படுகின்றன. DNA சேதம் படிப்படியாக சேர்ந்து அதிகரிப்பதும் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுக்கு நீண்டகாலம் வெளிப்படுவதும் இதற்கான காரணமாக இருக்கக்கூடும்.
மரபணுக்கள்
மார்பக புற்றுநோய் உருவாவதற்கு பங்களிப்பு செய்வதில் மரபணு அம்சங்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. பரம்பரையாக பெற்றோர் மூலம் கிடைக்கப் பெறுகின்ற மரபணு பிறழ்வுகள், அதுவும் குறிப்பாக BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்கள் மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை பெரிதும் அதிகரிக்கின்றன. இந்த பிறழ்வுகளில் ஏதாவதொன்றைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு 70% ஆயுட்கால ஆபத்துகள் இருக்கின்றன. மார்பக புற்றுநோய் உள்ள குடும்ப வரலாறு உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளன.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள்
ஹார்மோன்களுடன், குறிப்பாக, ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஆகியவற்றுடன் மிக பொதுவான தொடர்பை மார்பக புற்றுநோய் கொண்டிருக்கிறது. சிறுமியாக இளவயதிலேயே பருவம் எய்துபவர்கள் அல்லது மாதவிடாய் மிகவும் தாமதமாக நிற்கும் பெண்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர்.
நீண்டகாலத்திற்கு நீடிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுக்கு இத்தகையப் பெண்கள் வெளிப்படுவதே இதற்கு காரணம். ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்கின்ற பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய்க்கான இடர்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
பலமுறை கருத்தரிப்பது அல்லது நீண்ட கால அளவிற்கு தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவது போன்றவை இந்த ஆபத்தை குறைக்கிறது. மொத்த மாதவிடாய் சுழற்சியை குறைக்கின்ற அனைத்து விஷயங்களுமே ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுக்கு குறைந்த அளவிலேயே வெளிப்படுவதற்கு வழிவகுக்கிறது.
வாழ்க்கை முறை
வாழ்க்கை முறை காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு மற்றொரு காரணமாக இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்தகுதியின்மை, ஆல்கஹால் அருந்துதல் மற்றும் உடல்பருமன் போன்ற வாழ்க்கை முறை விருப்பத்தேர்வுகள், இந்நோய்க்கு அதிக ஆபத்தில் பெண்களை வைக்கிறது. உதாரணமாக ஒரு நாளில் ஒரு பாட்டில் மதுபானத்திற்கும் அதிகமாக அருந்துகின்ற பெண்கள், மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், ஆல்கஹால் ஈஸ்ட்ரோஜென் அளவுகளை அதிகரித்து, செல்களில் அழிவை ஏற்படுத்தி புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
உடலுழைப்பு இல்லாமை
உடல்சார் செயல்பாடு / உழைப்பு என்பது மற்றுமொரு மிக முக்கியமான அம்சம். வழக்கமாக உடல்சார் உழைப்பை / உடற்பயிற்சியை மேற்கொள்கின்ற பெண்கள், உடல்சார்ந்த செயல்பாடுகளை கொண்டிருக்கும் அல்லது சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறையை கடைபிடிக்கின்ற பெண்களை விட மார்பக புற்றுநோயால் அவதியுறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. உடற்பயிற்சியானது, ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யும், நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும் மற்றும் அழற்சியையும், வீக்கத்தையும் குறைக்கும். இவை அனைத்தும் புற்றுநோய்க்கான இடர்வாய்ப்பை குறைக்கக்கூடியவை.
உணவுமுறை
உணவுமுறை மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையிலான உறவுமுறையானது, இப்போதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும், தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளையும் மற்றும் சிவப்பு இறைச்சியையும் அதிக அளவு உட்கொள்வது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று இது தொடர்பான பல சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு மாறாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவுகள், மார்பக புற்றுநோய் நிகழ்வதற்கான வாய்ப்பை குறைக்க உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து காரணிகளை ஒருவர் அறிந்திருப்பது அவசியம் என்ற நிலையில், ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்படுவது சிகிச்சையின் விளைவுகளை மாற்றக்கூடியவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோய் கண்டறியப்படுமானால், அதற்கான சிகிச்சை என்பது, குறைவான ஊடுருவல் உள்ளதாகவும் மற்றும் அதிக பலனளிப்பதாகவும் இருக்கும்.
மேமோகிராம்கள், மார்பகங்களின் மீது சுயபரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் போன்ற வழக்கமான ஸ்க்ரீனிங் வழிமுறைகளின் மூலம் இந்நோயைக் கண்டறிய முடியும்.
ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் நபர்கள் சிறப்பான உயிர்பிழைக்கும் விகிதங்களை கொண்டிருக்கின்றனர். அத்துடன், மாற்று வழிமுறை சிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகள் பலவற்றையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய்க்கு எதிரான ஒரு முக்கிய யுத்தத்தின் கூறுகளாக இந்த சிகிச்சை விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன.
மார்பக புற்றுநோய் என்பது, பொதுவானதாக இருக்கின்ற போதிலும், ஆபத்து காரணிகளின் மாறுபட்ட வகைகள் அடையாளம் காணப்படுமானால், அதனை சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.
இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணிகள், அது குறித்த விழிப்புணர்வு, ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகியவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நேர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கும். மார்பக புற்றுநோய் என்ற பெரும் சுமையின் பாதிப்பைக் குறைக்க இவை நிச்சயமாக உதவும் என்றும் டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











