Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Chow Chow Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு பொதுவாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நேரம் இருந்தால் சாம்பார் அல்லது தக்காளி குழம்பு போன்றவை சைடிஷாக செய்யப்படுகிறது. ஆனால் இவை நாளடைவில் சலித்து விடும். இந்த சூழ்நிலையில் புதிய சட்னிகளை அரைப்பது அவசியம். அதிலும் அந்த சட்னி காய்கறியில் செய்யப்படுவதாக இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

பொதுவாக சௌ சௌ காயை பெரும்பாலான மக்கள் சாம்பார் வைப்பார்கள், மேலும் அதை பெரிதாக யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த காயை வைத்து அருமையான சட்னி செய்யலாம். சௌ சௌ பல ஆரோக்கிய நன்மைகள் ஒரு காய்கறியாகும். எனவே இந்த காய்கறியில் சட்னி செய்து சாப்பிடுவது சுவையுடன், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த சௌ சௌ சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துக்கும் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு சுவையான சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சௌ சௌ - 1
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு பல் - 2
- தக்காளி - 1
- வர மிளகாய் - 4
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- இட்லிப் பொடி - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சௌசௌவின் தோலை நீக்கி, விதைகளை அகற்றிய பிறகு, அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் வர மிளகாய், உரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சௌசௌ துண்டுகளைச் சேர்க்கவும். சௌசௌ-வில் சுவைகள் இறங்கும் படி நன்றாக வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி மற்றும் புளியை அந்தக் கலவையுடன் சேர்த்துச் சிறிது நேரம் வேகவிடவும். தக்காளி விரைவில் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதனால் இதன் சுவை அதிகரிக்கும்.
- கலவை ஆறியதும், அதை ஒரு மிக்ஸி ஜாடிக்கு மாற்றவும். அதனுடன் உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் இரண்டு ஸ்பூன் இட்லிப் பொடியைச் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கலக்குமாறு மீண்டும் அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் புதிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் இந்தத் தாளிப்பை அரைத்த விழுதில் சேர்த்து நன்கு கிளறவும். அவ்வளவுதான் சூப்பரான சௌசௌ சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications