Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
Jupiter In Cancer Forms Vipreet Rajyog 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலமாக பயணிப்பதால், குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக காணப்படும்.

அந்த வகையில் குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். இந்த கடக ராசியில் அக்டோபர் 31 ஆம் தேதி இருப்பார். இந்த கடக ராசியானது குரு பகவானின் உச்ச ராசியாகும். இந்த ராசியில் குரு பகவான் நுழைந்திருப்பதால், அது 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
குரு பகவான் 4 ஆம் வீட்டை பார்ப்பதால், வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, வீட்டின் சூழல் மேம்படும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை பணப்பிரச்சனைகளை சந்தித்து வந்தால், குருவின் அருளால் புதிய வருமான வழிகள் உருவாகி, பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.
ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய அளவில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதுவரை நிறைய செலவுகளை சந்தித்து வந்தால், இனி தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும். நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications