Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்.. -
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப நெல்லிக்காயை இந்த 5 பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க..
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
Venus Transit In Libra On 02 September 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.

இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


