உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..!

Colon Cancer: உலகளவில் மிகவும் கொடிய நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்தது. அதில் சமீப காலமாக இளம் வயதினரிடையே காணப்படும் பொதுவான புற்றுநோயாக குடல் புற்றுநோய் உள்ளது. குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும்.

Doctor Lists Top 7 Food Combinations That Help Protect Against Colon Cancer

பொதுவாக இந்த வகை புற்றுநோய் வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் சமீப காலமாக இளம் வயதினர்களிடையேயேயும் காணப்படுகிறது. இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்திவிடலாம். ஆனால் அதை கண்டறிவது தான் சவாலான ஒன்று. ஏனெனில் பெரும்பாலும் குடல் புற்றுநோய் அறிகுறிகள் முற்றிய நிலையில் தான் மக்களால் கவனிக்கப்படும்.

ஏனெனில் இதன் ஆரம்ப கால அறிகுறிகளானது தினசரி சந்திக்கும் லேசான ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். இந்த குடல் புற்றுநோயானது ஒருவருக்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் காரணமாக வரலாம். மேலும் நீண்டகால புகைப்பழக்கம் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவையும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இந்த குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் சிறந்த 7 உணவுகள் குறித்து டாக்டர். பிரபாகர் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

1. கொய்யா + எலுமிச்சை

"கொய்யாப்பழத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதில் உள்ள நார்ச்சத்து குடல் சரியாக வேலை செய்யவும், மலம் எளிதில் வெளியேறவும் உதவுகிறது. மேலும் இது குடல் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது" என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார்.

Doctor Lists Top 7 Food Combinations That Help Protect Against Colon Cancer

2. வேர்க்கடலை + தயிர்

"வேர்க்கடலையை வேக வைத்து, அத்துடன் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது, நார்ச்சத்து கிடைப்பதோடு, தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் குடலின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்" என்று டாக்டர் கூறியிருந்தார்.

3. வேகவைத்த காய்கறி + தேங்காய்

"காய்கறிகளை வேக வைத்து, அவற்றுடன் துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் காய்கறிகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலுக்கு கிடைத்து, மலத்தை எளிதில் வெளியேற செய்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது" என்று டாக்டர் கூறினார். அதுமட்டுமின்றி, இப்படி காய்கறிகளை எடுக்கும் போது உடலுக்கு வேண்டிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

Doctor Lists Top 7 Food Combinations That Help Protect Against Colon Cancer

4. ஆப்பிள்/கொய்யா + இலவங்கபட்டை

"ஆப்பிள் அல்லது கொய்யாவில் சிறிது பட்டைத் தூளை சேர்த்து உட்கொள்வது குடலுக்கு நல்லது. இப்படி உட்கொள்வதனால் அதில் உள்ள பெக்டின் போன்ற புளிக்கும் நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவி புரிகிறது" என்று டாக்டர் கூறினார்.

5. காய்கறி + சுண்டல் (கொண்டக்கடலை/பச்சைப்பயிறு)

"வேக வைத்த காய்கறிகளுடன், வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது பச்சை பயறை சேர்த்து சாலட் போன்று செய்து சாப்பிடும் போது, அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச் ஆகியவை ஒன்று சேர்ந்து SCFA என்னும் பியூட்டிரேட் உருவாக உதவுகிறது" என்று கூறினார். பியூட்டிரேட் என்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான, செரிமான மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலம். இது குடல் சுவர்களைப் பாதுகாத்து, வீக்கம்/அழற்சியைக் குறைத்து, உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

Doctor Lists Top 7 Food Combinations That Help Protect Against Colon Cancer

6. இளநீர் + அதன் வழுக்கை

"இளநீரையும், அவற்றின் வழுக்கையும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இவை மலம் எளிதில் வெளியேறவும், தினமும் சீரான குடலியக்கம் நடக்கவும் உதவி புரிகிறது" என்று கூறினார். ஒருவரது குடலியக்கம் சிறப்பான முறையில் இருந்தாலே, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். எனவே அடுத்தமுறை இளநீர் குடித்தால், அதன் வழுக்கையையும் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

7. நெல்லிக்காய் + தேன்

நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிகிறது என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார். வினைத்திறன் மிக்க ஆக்ஸிஜன் மூலக்கூறுகளுக்கும் (Reactive Oxygen Species), ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கும் இடையே ஏற்படும் சமநிலையின்மையால் உண்டாகும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், பெருங்குடலுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட அழற்சி மற்றும் திசு சேதத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இதைத் தவிர்க்க சிறந்த வழி தேன் நெல்லிக்காய் தான்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, May 13, 2026, 10:30 [IST]
Desktop Bottom Promotion