Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Colon Cancer Symptoms In Tamil: சமீப காலமாக குடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களே இணையத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஏனெனில் தற்போது குடல் தொடர்பான பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். அதில் செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் மட்டுமின்றி, குடல் புற்றுநோயாலும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக குடல் புற்றுநோய் வயதானவர்களுக்கு தான் வரும் ஒரு நோயாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இளம் வயதினரைடையேயும் குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இப்படியான குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புளோரிடாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் ஜோசப் சல்ஹாப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "குடல் புற்றுநோயின் 8 ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளார். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்" என்றும் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "சமீப காலமாக இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டியது அவசியம். ஏனெனில் குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிக்கை அளிப்பது எளிது. ஆனால் தாமதமாக கண்டறியும் போது, குணப்படுத்துவது என்பது கடினம்" என்று கூறினார்.
அதோடு, குடல் புற்றுநோயின் 8 ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. குடலியக்கத்தில் மாற்றம்
திடீரென்று காரணமின்றி தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் நிலைத்தன்மை அல்லது வடிவத்தில் மாற்றங்களை சந்தித்தால், அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் ஜோசப் கூறியுள்ளார்.
2. மலக்குடலில் இரத்தக்கசிவு
மலம் கழிக்கும் போது, இரத்தம் கலந்து மலம் வெளிவந்தாலோ அல்லது ஆசன வாயில் இருந்து இரத்தக்கசிவை சந்தித்தாலே, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
3. அடிவயிற்று வலி அல்லது அசௌகரியம்
அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உணர்கிறீர்களா? அதுவும் வயிற்று பிடிப்பு, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் அல்லது அடிவயிற்று வலி போன்றவற்றை சந்தித்தால், அதை சாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள். இது குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார்.
4. முழுமையடையாத குடல் அசைவுகள்
முழுமையாக மலம் கழித்த பின்னரும் மலம் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் அதுவும் குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
5. உடல் சோர்வு அல்லது களைப்பு
காரணமின்றி தொடர்ந்து மிகுந்த உடல் சோர்வையும், உடல் பலவீனத்தையும் சந்திக்கிறீர்களா? அப்படி இருந்தால் குடலில் பெரிய அளவில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார்.
6. எடை இழப்பு
உணவில் எந்த மாற்றமும் செய்யாமல், உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்து, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றத்தைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள் என்று கூறினார்.
7. இரும்புச்சத்து குறைபாடு
குடல் புற்றுநோய் நாள்பட்ட இரத்த இழப்பின் விளைவாக இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். எனவே நீண்ட காலமாக மலத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவதை சந்தியுங்கள்.
8. முதுகு வலி
பெரும்பாலானோர் கவனிக்க தவறும் ஒரு அறிகுறி தான் முதுகு வலி. பலரும் முதுகு வலியை தவறான தோரணையின் காரணமாக ஏற்படலாம் என்று நினைத்து, விட்டுவிடுவார்கள். ஆனால் புற்றுநோய் கட்டிகள் நரம்புகள் அல்லது கட்டமைப்புகளில் அழுத்தும் போது அல்லது நோய் பரவியிருந்தால், இப்படியானனமுதுகு வலியை சந்திக்க நேரிடும் என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அறிகுறியை தொடர்ந்து காரணமின்றி சந்தித்து வந்தால், நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள் என்றும் டாக்டர் கூறியிருந்தார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
