Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Cardamom Benefits In Tamil: நம் வீட்டு சமையலறையில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மசாலா பொருள் தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் வாய் புத்துணர்ச்சிக்காக பொதுவாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில், இந்த ஏலக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது.

அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஏலக்காய் பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்தவும், நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவி புரிகிறது.
இப்படிப்பட்ட ஏலக்காயை சமையலில் சேர்த்து எடுப்பது மட்டுமின்றி, தினமும் இரவு தூங்கும் முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நல்ல தூக்கத்துடன், குறிப்பிட்ட சில நன்மைகளும் கிடைக்கும் என்பது தெரியுமா? கீழே இரவு தூங்கும் முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
1. செரிமானம் மேம்படும்
ஏலக்காய் செரிமான நொதிகளைத் தூண்டிவிட்டு, உண்ட உணவை திறம்பட உடைக்க உதவுகின்றன. இதன் விளைவாக வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவை தடுக்கப்படும். இப்படிப்பட்ட ஏலக்காயை இரவு தூங்கும் முன் மெல்லும் போது, செரிமான பிரச்சனையால் இரவு தூக்கம் பாழாவது தடுக்கப்பட்டு, செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவி புரியும். அதுமட்டுமின்றி, ஏலக்காய் அமிலத்தன்மையைக் குறைக்கவும், குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஆகவே இரவு உணவுக்கு பின் செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், அதிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஏலக்காயை சாப்பிடுங்கள்.
2. புத்துணர்ச்சியான சுவாசம்
உங்கள் வாய் துர்நாற்றத்துடன் உள்ளதா? எத்தனை முறை பற்களை துலக்கினாலும், நாக்கை சுத்தம் செய்தாலும், வாய் துர்நாற்றம் போகவில்லையா? அப்படியானால் ஏலக்காயை பயன்படுத்துங்கள். ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்கடீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க கடைகளில் விற்கப்படும் கண்ட மௌத் வாஷ்களைப் பயன்படுத்தாமல், ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வாயில் எச்சில் உற்பத்தி தூண்டிவிடப்பட்டு, வாய் வறட்சி நீங்கி, வாய் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது.
3. நல்ல தூக்கம்
இரவு நல்ல நிம்மதியான மற்றும் ஆழந்த தூக்கத்தைப் பெற நினைக்கிறீர்களா? ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய் நரம்பு மண்டலத்தில் இனிமையான விளைவை ஏற்படுத்துகிறது. அதுவும் இரவு தூங்கும் போது சாப்பிடுவதன் மூலம் மனம் ரிலாக்ஸாகி, நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது மற்றும் மன அமைதியின்மை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே உடலை சீராக வைத்துக் கொள்ள நினைத்தால், இரவு தூங்கும் போது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


