Latest Updates
-
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம்
இரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் நெய்யை பாலுடன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
Milk Ghee Benefits: இரவு தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இப்பழக்கமானது ஒரு ஆரோக்கியமான பழக்கம். இப்படி தினமும் பால் குடிப்பதன் மூலம், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். மேலும் பாலை தினமும் குடிக்கும் போது எலும்புகள், பற்கள் போன்றவை வலுபெறும். அப்படிப்பட்ட பாலுடன் 1 டீஸ்பூன் நெய் கலந்து குடித்தால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
பாரம்பரிய மருத்துவத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் இது ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. செரிமான மண்டலம் மேம்படும்
வெதுவெதுப்பான பாலில் நெய் கலந்து குடித்து வந்தால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட ஊக்குவிக்கிறது. ஆய்வுகளின் படி, பியூட்ரிக் அமிலமானது செரிமான மண்டலத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. எனவே செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பாலுடன் நெய் கலந்து குடித்து வாருங்கள்.
2. மெட்டபாலிசம் மேம்படும்
வெதுவெதுப்பான பாலுடன் நெய் கலந்து குடிக்கும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படுகிறது. நெய்யில் உள்ள ஒரு வகையான கொழுப்பு எளிதில் ஜீரணிக்கப்படுகிறது மற்றும் கல்லீரலால் அவை எளிதில் ஆற்றலாக மாற்றபடுகின்றன. எனவே பாலில் நெய் கலந்து குடிக்கும் போது, உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, மெட்டபாலிச செயல்பாடும் மேம்படுகிறது.
3. மூட்டு வலி குறையும்
மூட்டு வலியால் அதிகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதிலிருந்து எளிதில் விடுபட விரும்பினால், வெதுவெதுப்பான பாலில் நெய் கலந்து குடித்து வாருங்கள். இதனால் நெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகளான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லினோலியிக் அமிலம் போன்றவை வீக்கத்தைக் குறைத்து, மூட்டு வலியில் இருந்து விடுவிக்கின்றன.
4. சருமம் பொலிவு பெறும்
உங்கள் சருமம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படியானால் வெறுமனே சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை மட்டும் போடாமல், பாலுடன் நெய் கலந்து குடித்து வாருங்கள். இதனால் நெய்யில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து மேம்படுத்தும். அதுவும் இந்த வைட்டமின்களானது சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளித்து அழகாக்கும். அதுவும் இதில் உள்ள வைட்டமின் ஈ ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து நல்ல பாதுகாப்பை அளித்து, சரும பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.
5. எடை குறைய உதவும்
நிறைய பேர் நெய் உடல் எடை அதிகரிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவில் நெய்யை மிதமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதற்கு நெய்யில் உள்ள ஒரு வகையான கொழுப்பு தான் காரணம். ஆய்வுகளின் படி, நெய்யில் உள்ள இந்த கொழுப்பு வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க செய்வதோடு, வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே பாலுடன் நெய் சேர்த்து குடிக்கும் போது, உடல் எடை குறையும்.
6. நல்ல தூக்கம் கிடைக்கும்
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து குடிக்கும் போது, இரவு நல்ல நிம்மதியான ஆழந்த தூக்கம் கிடைக்கும். ஏனெனில் இவ்விரண்டிலுமே ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது ரிலாக்ஸ் உணர்வை அளிப்பதோடு, நல்ல தூக்கத்தைப் பெற தூண்டும். ஆகவே தூக்கமின்மையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தால், பாலில் நெய் கலந்து குடித்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
