சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..

Posted By:

Chow Chow Poriyal Recipe In Tamil: இதுவரை நீங்கள் சௌ சௌ காயை வாங்கினால், அதைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு பொரியலும் செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த பொரியலுக்கு தனித்துவமான சுவையில் ஒரு பொடியை அரைத்து சேர்க்கும் போது சௌ சௌ பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.

Chow Chow Poriyal How To Make This Healthy Poriyal Recipe

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இந்த சௌ சௌ பொரியலை செய்தால், பின் இந்த காயை வாங்கும் போதெல்லாம் இந்த பொரியல் தான் செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சௌ சௌ பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சௌ சௌ - 250 கிராம் (தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

அரைப்பதற்கு...

* வரமிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌ காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து, காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் காய் வெந்துவிட்டதா என்று பார்த்து, காய் வெந்து நீர் வற்றிவிட்டால் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான சௌ சௌ பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 22, 2026, 14:18 [IST]
Desktop Bottom Promotion