Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Mars Venus Make Kendra Yoga On 29 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ, நிலைகளின் மூலமோ யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதுவும் எப்போது இரண்டு கிரகங்கள் 90 டிகிரி இடைவெளியில் இருக்கிறதோ, அப்போது கேந்திர யோகம் உருவாகும். அப்படி உருவாகும் யோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வருமானத்தில் உயர்வையும், வாழ்வில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூலை 29 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சுக்கிரனால் கேந்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக இந்த யோகத்தால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட கால ஆசைகளும், லட்சியங்களும் நிறைவேறும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் உதவி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள்.
சிம்மம்
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். மனதில் உள்ள நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். கடினமாக உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
துலாம்
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீரென்று நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த யோக காலத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். மன அழுத்தம் குறையும். வெற்றிக்கான புதிய பாதைகள் திறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


