செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!

Mercury Transit In Virgo On 07 September 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் செப்டம்பர் 07 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார்.

Mercury Transit In Virgo On 07 September 2026 These Zodiac Signs Will Face Many Problems

புதன் தனது சொந்த ராசிக்கு செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனைகள், உறவுகளில் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் கன்னி ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங், பயணம் போன்றவற்றிற்கு அதிக செலவுகளை செய்ய வாய்ப்புள்ளது. வருமானத்தை விட செலவுகள் அதிகரிப்பதால், பணத்தை சேமிக்க முடியாமல் போகும். இக்காலத்தில் எந்த முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் போகும்.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் அதை கவனமாக படித்து பார்க்க வேண்டும். புதியதாக எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பேச்சில் கட்டுப்பாடு அவசியம்.

மீனம்

மீன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய அளவில் பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். சிறு விஷயங்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டு வணிகம் செய்பவர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தத்தையும் இறுதிசெய்யும் முன் ஆவணங்களை நன்கு படித்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தவறான புரிதல்கள், சந்தேகங்கள் மற்றும் அவரச முடிவுகளை தவிர்த்தால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 4, 2026, 23:20 [IST]
Desktop Bottom Promotion