Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Chef Deena's Restaurant-Style Soya Ghee Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் என்றால் ரொம்ப பிடிக்குமா? இந்த மீல் மேக்கரை எப்பவும் பிரியாணிலோ அல்லது கிரேவியாகவோ செய்து தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை அந்த மீல் மேக்கரைக் கொண்டு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் செய்து கொடுங்கள். இந்த சோயா நெய் ரோஸ்ட் ரெசிபியை பிரபல செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி செய்வதென்று விளக்கமாக செய்து காட்டியுள்ளார்.

முக்கியமாக, இந்த சோயா நெய் ரோஸ்ட் 2 இன் 1 ஆக பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அது எப்படியெனில், சோயா நெய் ரோஸ்ட்டை சிறிது கிண்ணத்தில் எடுத்து, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியைத் தூவினால், அற்புதமான சாட் போன்று சாப்பிடலாம். அதுவே சூடான சாதம் இருந்தால், அதை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி, சோயா பிரியாணி போன்றும் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு செஃப் தீனா பகிர்ந்து கொண்ட ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனா பகிர்ந்து கொண்ட ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 500 கிராம்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 8-10
* குண்டு வரமிளகாய் - 3-4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
தாளிப்பதற்கு...
* நெய் - 4-5 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, அதில்
உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மீல் மேக்கருடன் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, காஷ்மீரி
வரமிளகாய், குண்டு மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, பட்டை,
கிராம்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை எடுத்துக் கொண்டு, அத்துடன்
புளிச்சாற்றினை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4-5 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து நன்கு கிளறி
பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த சோயாவை சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது
நீரை ஊற்றி மசாலாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, கறிவேப்பிலை, கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கி, 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால்,
காரசாரமான சோயா நெய் ரோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications