Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Cancer: உயரமானவர்களுக்கு இந்த 8 புற்றுநோய் வர நிறைய வாய்ப்பிருக்காம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..
Cancer: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய ஆய்வில், உயரம் குறைவானவர்களை விட உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி ஃபண்ட் கூறியுள்ளது.
தி UK மில்லியன் வுமன் நடத்திய ஆய்வில், சோதனை செய்த 17 புற்றுநோயாளிகளில் 15 நோயாளிகளுக்கு நீங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு விரைவில் புற்றுநோயைப் பெறக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. அதுவும் ஒவ்வொரு 10 செ.மீ-க்கும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் சுமார் 16 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேப் போன்ற அதிகரிப்பு ஆண்களிடையேயும் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சராசரி உயரம் கொண்ட 10,000 பெண்களில் சுமார் 165 செ.மீ உயரம் கொண்ட 45 பெண்களுக்கு புற்றுநோய் வருகிறது என்றால், 175 செ.மீ உயரமுள்ள ஒவ்வொரு 10,000 பெண்களில் 52 பேருக்கு புற்றுநோய் வரும்.
அதுவும் இந்த ஆய்வில் எந்த மாதிரியான புற்றுநோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளன. அந்த புற்றுநோய்களாவன: கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், எண்டோமெட்ரியம் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை ஆகும்.
ஒரவரது உயரம் எப்படி புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்?
ஒருவரது உயரத்திற்கு மரபணுக்கள் எப்படி காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றனவோ, அதன் அடிப்படையில் உயரம் மற்றும் புற்றுநோயின் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்புக்கு உயிரியல் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு உண்மையான காரணம் இன்னும் தெளிவாக தெரியாவிட்டாலும், பல காரணிகள் இதற்கு பங்களிக்கக்கூடும்.
அதில் முதலாவது, உயரமான நபர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி 1 (IGF-1) போன்ற சில ஹார்மோன்கள் அதிக அளவில் இருக்கலாம். இந்த ஹார்மோன்கள் செல் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவித்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அடுத்ததாக, மரபணு காரணிகளும் ஒரு பங்கை வகிக்கலாம். உயரமானவர்களின் உயரத்திற்கு பங்களிக்கும் சில மரபணு மாறுபாடுகளும் சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். கூடுதலாக, ஊட்டச்சத்து காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை நடத்தைகள் போன்றவையும் உயரத்திற்கும் புற்றுநோய் அபாயத்திற்கும் இடையிலான உறவை பாதிக்கலாம்.
உயரமானவர்கள் புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?
உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் மற்றவர்களை விட அதிகம் இருந்தாலும், மிகக்குறைவான அளவில் தான் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஒருவருக்கு புற்றுநோய் வர வெறும் உயரம் மட்டுமே காரணமல்ல, வேறு பல வாழ்க்கைமுறை விஷயங்களும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. அவற்றை சரிசெய்தாலே புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். அவை பின்வருமாறு:
* ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டும்.
* வெயிலில் அதிகமாக சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
* மது அருந்துவதை குறைக்க வேண்டும்.
* புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒருவர் பின்பற்றி வந்தாலே, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைத்து, நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications