World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!

World Brain Day 2026: நமது உடலிலேயே மூளை மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். முக்கியமாக இதயம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானாலும் சரி, உடலில் உள்ள மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானாலும் சரி, அதற்கு மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மூளை கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி உலக மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது.

World Brain Day 2026 Doctor Shares Top Foods That Detoxify The Brain

இந்த மூளை தினத்தில் மூளையை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தான் பார்க்கப் போகிறோம். இதுவரை நாம் கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் குறித்து தான் பார்த்திருப்போம். ஆனால் மூளையிலும் நச்சுக்கள் சேரும் என்பது தெரியுமா?

இப்படி மூளையில் நச்சுக்கள் அதிகம் சேர்வதனால் தான் அல்சைமர் போன்ற நினைவாற்றல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க வேண்டுமானால் மூளையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர். பிள்ளை அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூளையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "நல்ல தூக்கம், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் நல்ல உடற்பயிற்சி ஆகிய மூன்றும் தான் மூளையை காப்பாற்றும் விஷயங்களாகும். நாம் தூங்கும் போது மூளையும் ஓய்வு எடுத்தாலும், அதன் ஒரு பகுதி மட்டும் விழித்து உள்ளுறுப்புக்களை இயக்கிக் கொண்டிருக்கும். நமக்கு கனவு வருவதற்கும் அது தான் காரணம். இப்படிப்பட்ட மூளையை சுத்தம் செய்வதால் என்ன நன்மை என்றால் ஆயுள் முழுவதும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்" என்றார்.

1. நல்ல தூக்கம்

"மூளையை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். அப்படி தூங்கினால் தான் மூளையில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும் மற்றும் எண்ணங்கள் சீராக இருக்கும். எனவே தினமும் போதுமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.

2. டயட்

நாம் சாப்பிடும் உணவு தான் நல்ல உடலை உருவாக்குகிறது மற்றும் மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ்

"காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. இந்த காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளும் போது, மூளை நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும். சில சமயங்களில் மூளை மந்தமாக, எதையும் யோசிக்க முடியாமல் இருக்கும். இப்படியானவற்றை இந்த காய்கறிகள் போக்கும்" என்று கூறினார்.

* ஆரோக்கியமான நல்ல கொழுப்புக்கள்

"நல்ல கொழுப்புக்கள் என்றால் அது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான். இந்த கொழுப்பு அமிலங்கள் சூரை மீன், பாறை மீன், நெத்திலி மீன், வஞ்சர மீன், அயில மீன் மற்றும் நட்ஸ், விதைகள் போன்றவற்றிலும் உள்ளன. இந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வரும் போது, மூளையைச் சுற்றியுள்ள திசுக்களில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்" என்று கூறினார்.

World Brain Day 2026 Doctor Shares Top Foods That Detoxify The Brain

* ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள்

"காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக பழங்களில், அதுவும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றிலும், அஸ்கார்பிக் அமிலம் நிறைந்த திராட்சை, ஆப்பிள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, செயல்பாட்டை மேம்படுத்துகிறது" என்று கூறினார்.

* மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்

"இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்றவற்றில் இயற்கையாகவே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை தினசரி சமையலில் சேர்க்கும் போதோ அல்லது அவற்றைக் கொண்டு கசாயம் போன்று தயாரித்து குடிக்கும் போதோ, மூளையில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்" என்று டாக்டர் கூறினார்.

3. உடற்பயிற்சி

"உடற்பயிற்சி என்றால் ஜிம் சென்று நிறைய எடையை தூக்கி பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் கை, கால்களை அசைத்துக் கொண்டே லேசான வாக்கிங் போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். எனவே முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் 10?15 நிமிடம் செய்யுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

4. இடைப்பட்ட உண்ணாவிரதம் (intermittent fasting)

"கூடுதலாக 12-16 மணிநேரம் இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அதற்கு இந்த உண்ணாவிரதத்தை தினமும் மேற்கொள்ளாமல், மாதத்திற்கு 2 முறை மேற்கொள்ளலாம்.

இது தவிர தினமும் நீரை அதிகமாக அருந்த வேண்டும். உடல் நீரேற்றத்துடன் இருந்தால் தான், இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சிறப்பாக இருக்கும். மேலும் காரமான உணவுகள், ஜங்க் உணவுகள், மது அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதோடு காபி, டீயையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றி வரும் போது, மூளையில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, எதிர்காலத்தில் அல்சைமர் நோய், பர்கின்சன் நோய் போன்றவற்றின் அபாயம் குறைவதற்கான வாய்ப்புள்ளது." என்றும் டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, July 22, 2026, 12:47 [IST]
Desktop Bottom Promotion