Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Venus Transit In Uthiram Nakshatra On 29 July 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். செல்வத்தின் காரணி சுக்கிரன் என்பதால் சுக்கிர பெயர்ச்சியானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சுக்கிரன் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஜூலை 29 ஆம் தேதி தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த சுக்கிர பெயர்ச்சியின் போது உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சுக்கிரன் சூரியனின் நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் விளைவு 12 ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில முக்கியமான முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். நீண்ட கால பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய ஆற்றல் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை 29 முதல் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வரன் தேடி வரும். ஏற்கனவே காதலித்து வந்தால், அவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கலாம். புதுமண தம்பதிகள் சுக்கிரனின் ஆசியால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கான வாயப்பள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

