Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 4 பழங்களை அதிகமா சாப்பிடுங்க..
Colon Cancer: புற்றுநோய் மிகவும் கொடிய நோய் என்பதை அறிவோம். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை புற்றுநோய் தாக்கும் இடத்தைப் பொறுத்தது. உலகளவில் குடல் புற்றுநோய் மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். சமீப காலமாக இந்த குடல் புற்றுநோயால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த குடல் புற்றுநோய் ஒருவருக்கு வர பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதுமை, உடல் பருமன், புகைப்பிடித்தல், அதிகப்படியான மதுப்பழக்கம், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எப்படி நாம் உண்ணும் சில உணவுகள் குடல் புற்றுநோயை உண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளதோ, அதேப் போன்று குறிப்பிட்ட சில பழங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இப்படி சத்துக்கள் நிறைந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, குடல் ஆரோக்கியம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், உடலினுள் ஏற்படும் காயங்களையும் எதிர்த்து போராட உதவுகின்றன.
இந்நிலையில் எய்ம்ஸ், ஹார்வார்டு மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் குடல் புற்றுநோயைத் தடுக்க மற்றும் அவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவும் 4 பழங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பழங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் பெருங்குடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், பெருங்குடல் அபாயத்தைக் குறைக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இவை குடல் பாக்டீரியாக்களுக்கு மிகவும் நன்மை விளைவிக்கக்கூடியவை எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் கிரேப்ஃபுரூட் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து வருமாறு பரிந்துரைக்கிறார்.
2. கிவி
குடல் புற்றுநோயை தடுக்க உதவும் மற்றொரு பழம் தான் கிவி. ஏனெனில் இந்த கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது குடல் நுண்ணுயிரிகளை வளரத் தூண்டி, செரிமான செயல்முறையை ஊக்குவித்து, குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. மேலும் இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதாகவும் டாக்டர் கூறினார்.
3. ஆப்பிள்கள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதுவும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றொரு பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிள் பெருங்குடலுக்கு வலுவான பாதுகாப்பை வழங்குவதாக டாக்டர் சேத்தி கூறினார்.
4. தர்பூசணி
தர்பூசணியில் லைகோபைன் அதிகம் நிறைந்துள்ளது. இதுவே அந்த பழத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் மற்றும் இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்து போராடுவதற்கும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் சமீபத்திய மெட்டா பகுப்பாய்வில் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் தர்பூசணி வலுவான விளைவுகளைக் கொண்டிருந்தது. இதற்கு அதில் உள்ள லைகோபீன் உள்ளடக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதெனில், மேலே டாக்டர் கூறிய 4 பழங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு குடல் புற்றுநோயின் அபாயம் குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



