Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
Aadi Krithigai Special Kothumai Appam Recipe in Tamil: ஆடி மாதத்தில் பல முக்கியமான பண்டிகைகள் வருகிறது. அதில் முக்கியமான ஒரு பண்டிகைதான் ஆடு கிருத்திகை. பொதுவாக ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நாளானது தமிழ்க் கடவுள் முருகனை வழிபடுவதற்கான சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வரும் கிருத்திகை நாளானது மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் முருகனுக்கு பிடித்த உணவுகளை செய்து வழிபடுவது அவரது ஆசியை பெற உதவும். அப்படி முருகனின் அருளைப் பெற உதவும் ஈசியாக செய்யக்கூடிய ஒரு உணவுதான் கோதுமை அப்பம்.

கோதுமை, வாழைப்பழம் மற்றும் வெல்லம் இருந்தால் போதும் இந்த அப்பத்தை எளிதாக செய்து விடலாம். இந்த கோதுமை அப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும். அதோடு இந்த கோதுமை அப்பத்தை ஒருமுறை செய்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். ஆடி கிருத்திகை மட்டுமின்றி இந்த அப்பத்தை நீங்கள் விரும்பும் போதெல்லாம் டக்குனு செய்து விடலாம்.
உங்களுக்கு சுவையான கோதுமை அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கோதுமை மாவு
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- 1 வாழைப்பழம்
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
- 1 கப் துருவிய வெல்லம்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- ¼ கப் நெய்
- 1 சிட்டிகை உப்பு
- 2 சிட்டிகை சமையல் சோடா
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ⅓ கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் வெல்லத்தைச் சேர்த்து, அது முழுமையாகக் கரையும் வரை சூடாக்கவும்.
- வெல்லம் முழுமையாகக் கரைந்ததும், அதை வடிகட்டி வெல்லக் கரைசலைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இப்போது, நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை மாவு கலவையுடன் சேர்க்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்தும் சேர்க்கலாம்.
- இப்போது வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை மாவில் சேர்க்கவும்.
- மாவு மற்றும் வாழைப்பழம் ஆகியவை வெல்லக் கரைசலுடன் நன்றாகக் கலக்குமாறு நன்கு கலக்கவும்.
- இறுதியாக, சமையல் சோடா சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அப்பம் மாவின் பதத்திற்கு ஏற்பத் தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது பணியாரக் கல்லைச் சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானதும், ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் நிறையும் வரை அப்பம் மாவை ஊற்றவும்.
- தீயைக் குறைத்து வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு அப்பங்களை கவனமாகத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வேகவைக்கவும். அப்பத்தின் உட்பகுதி நன்றாக வெந்துள்ளதா என்பதை சோதித்து விட்டு கல்லிலிருந்து எடுக்கவும்.
- இதேபோல மீதமுள்ள மாவையும் ஊற்றி எடுத்தால் சுவையான கோதுமை அப்பம் ரெடி!



Click it and Unblock the Notifications
