Latest Updates
-
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
Jupiter Transit In Leo 2026 After 12 Years: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகவும், செல்வம், அறிவு, குழந்தைகள், மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், குரு பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்வில் ஆழமாக இருக்கும்.

தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியானது குரு பகவானின் உச்ச ராசியாகும். இந்த ராசியில் குரு பகவான் அதிசார நிலையில் உள்ளார். இதன் தாக்கம் 12 அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் மாதத்தில் கடக ராசியில் தனது பயணத்தை நிறுத்தி, சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசிக்கு குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி நுழையவுள்ளார்.
சிம்ம ராசியில் குரு பகவான் நுழைவது மரியாதை, தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். 12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்குள் நுழையும் குரு பகவானின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது குரு பகவான் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பிக்கும். நிதி முடிவுகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கலாம். சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். இருந்தாலும் இக்காலத்தில் எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



