Latest Updates
-
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்!
Navpancham Rajyog On 01 September 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே ஒரு அற்புதமான ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது நீதிமான் சனி பகவான் மற்றும் தேவர்களின் குருவான குரு பகவானின் நிலைகளால் உருவாகிறது. அது தான் நவபஞ்ச ராஜயோகம். இந்த யோகத்தின் போது சனி பகவானும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பர்.
ஜோதிடத்தில் நவபஞ்ச ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் செல்வம், அதிர்ஷ்டம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளது. இப்போது செப்டம்பர் 01 ஆம் தேதி சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குறிப்பாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் வசதிகள் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் கனவு இக்காலத்தில் நனவாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



