Latest Updates
-
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும்
Chettinad Parangikai Pulikari Recipe in Tamil: செட்டிநாடு உணவுகள் அவற்றின் தனித்துவமான சுவைக்காக உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறது. ஹோட்டல்களில் கூட செட்டிநாடு ஹோட்டல் என்ற பெயரைப் பார்த்தாலே அங்கு கண்ணை மூடிக்கொண்டு நுழையும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். மதியம் சிம்பிளான அதேமசயம் சுவையான ஒரு செட்டிநாடு குழம்பை செய்ய ஆசைப்படுகிறீர்களா?

அப்படியெனில் இந்த பரங்கிக்காய் புளிக்கறியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த பரங்கிக்காய் புளிக்கறி செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட. உங்களுக்கு இந்த பரங்கிக்காய் புளிக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய பரங்கிக்காய்
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சோம்பு
- கால் ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1/4 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1 பெரிய தக்காளி
- 1/2 ஸ்பூன் மல்லித் தூள்
- தேவையான அளவு தண்ணீர்
- 1/2 கப் புளிக்கரைசல்
- 1 ஸ்பூன் வெல்லம்
- 1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி, சாம்பார் பொடி மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய பரங்கிக்காயைச் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
- அதன்பின், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பரங்கிக்காய் வேகும் வரை கொதிக்கவிடவும்.
- பின்னர் மிளகுத் தூள், வெல்லம் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, குழம்பு கெட்டியாகி ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்கறி ரெடி!



Click it and Unblock the Notifications