Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்..
Raksha Bandhan 2026: வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகையானது ஆவணி மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கைமார்கள் தனது சகோதருக்கு ராக்கி கயிற்றினை கட்டுவது வழக்கம். என்ன தான் ரக்ஷா பந்தன் ஒரு வடஇந்திய பண்டிகையாக இருந்தாலும், தற்போது தென்னிந்தியாவிலும் ராக்கி கட்டும் வழக்கம் இருந்து வருகிறது.

நீங்கள் வட இந்தியாவில் கொண்டாடுவது போன்று ரக்ஷா பந்தன் கொண்டாடாவிட்டாலும், உங்கள் அண்ணனுக்கு ராக்கி கயிற்றினை மட்டும் வாங்கி கட்டுவீர்களானால், கண்ட நிறத்தில் ராக்கி கயிற்றினை வாங்கி கட்டாமல், அவர்களின் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கயிற்றினை கட்டுங்கள்.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நிறத்துடன் தொடர்புடையது. அதுவும் சகோதரரின் ராசிக்கு ஏற்ப ராக்கியின் நிறத்தைத் தேர்ந்தெடுப்பது அவரது வாழ்க்கைக்கு மங்களகரமானதாக அமையும். இப்போது எந்த ராசிக்காரருக்கு எந்த நிற ராக்கியை கட்டலாம் என்பதைக் காண்போம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். எனவே உங்கள் சகோதரர் இந்த ராசிகளை சேர்ந்தவரானால், அவர்களுக்கு சிவப்பு, மெரூன் அல்லது ஆரஞ்சு நிற ராக்கியை அணிவது மங்களகரமானது. ஜோதிடத்தின் படி, இந்த நிறங்களானது தைரியம், ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் தொடர்புடையவை. எனவே உங்கள் சகோதரரின் வாழ்வில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வர இந்த நிற ராக்கியை கட்டுங்கள்.
ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். உங்கள் சகோதரர் இந்த ராசிகளை சேர்ந்தவரானால், அவர்களுக்கு க்ரீம், பிங்க் போன்ற நிறத்தில் ராக்கியை தேர்ந்தெடுத்து கட்டுங்கள். இந்த நிற ராக்கியை கட்டும் போது, அது அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் செழிப்பும் கொண்டு வரும்.
மிதுனம் மற்றும் கன்னி
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி புதன். உங்கள் அண்ணன் இந்த ராசிகளை சேர்ந்தவராக இருந்தால், அவர்களுக்கு பச்சை நிற ராக்கியை வாங்கி கட்டுங்கள். பச்சை நிறம் அறிவு, தகவல் தொடர்பு மற்றும் கற்றலுடன் தொடர்புடையது. இது உங்கள் சகோதரரின் தொழில் மற்றும் முடிவெடுக்கும் திறன்களுக்குச் சாதகமாக இருக்கலாம்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். உங்கள் அண்ணன் இந்த கடக ராசியை சேர்ந்தவரானால், அவருக்கு வெள்ளை அல்லது சில்வர் நிற ராக்கியை வாங்கி கட்டுங்கள். இந்த ராசியின் அதிபதியான சந்திரன் மனம் மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக இருப்பதால், இந்த நிற ராக்கியை கட்டும் போது, அது உங்கள் சகோதரருக்கு மன அமைதியைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். உங்கள் சகோதரர் இந்த சிம்ம ராசிக்காரர் என்றால், அவருக்கு கோல்டன் அல்லது ஆரஞ்சு நிற ராக்கியை கட்டுங்கள். ஜோதிடத்தில் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம் மற்றும் தலைமைத்துவத் திறனின் காரணியாகக் கருதப்படுவதால், இந்நிற ராக்கியை கட்டும் போது அது தன்னம்பிக்கையையும், தலைமைத்துவ திறனையும் அதிகரிக்கும்.
தனுசு மற்றும் மீனம்
தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி குரு பகவான். உங்கள் அண்ணன் இந்த ராசிகளைச் சேர்ந்தவரானால், அவருக்கு மஞ்சள் அல்லது கோல்டன் நிற ராக்கியை கட்டுங்கள். இந்த நிறமானது உங்கள் அண்ணனுக்கு முன்னேற்றத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும்.
மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான். உங்கள் சகோதரர் இந்த ராசிகளை சேர்ந்தவரானால், அடர் நீல நிற ராக்கியை கட்டுங்கள். இந்த நிறமானது சனி பகவானுக்கு உரியது மற்றும் இது நிலைத்தன்மை, ஒழுக்கம் மற்றும் பொறுமையுடன் தொடர்புடையவை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
