Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Kollu Dosa With Poondu Thakkali Chutney Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கொள்ளு தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பூண்டு தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விரும்பி சாப்பிடிக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கொள்ளு தோசை மற்றும் பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு தோசை, பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு தோசை மாவிற்கு...
* பச்சரிசி - 1 டம்ளர்
* கொள்ளு - 1/2 டம்ளர்
* உளுத்தம் பருப்பு - 1/4 டம்ளர்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* அவல் - 1/4 கப் (10 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 20 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை
எடுத்து நீரில் 4 முறை கழுவி விட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி 8
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 1/4 கப் அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பொருட்களை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, 1/2 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து, மாவை
மூடி வைத்து 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், பூண்டு தக்காளி சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, வேக வைத்து
எடுத்தால், கொள்ளு தோசை தசார்.



Click it and Unblock the Notifications