Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
Foods To Prevent Cancer In Tamil: தற்போது புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினரிடையே புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எப்போது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்கிறதோ, அப்போது புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயின் பல வகைகள் உள்ளன. அது புற்றுநோய் கட்டிகள் வளரும் இடம் அல்லது பகுதியைப் பொறுத்தது.

இப்படி புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கு வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், குறிப்பிட்ட ரசாயனங்களின் வெளிப்பாடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவாறு எந்த ஒரு கவசமும் இல்லை என்றாலும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்தால், பெரிய வித்தியாசத்தைக் காணலாம். முக்கியமாக நாம் உண்ணும் குறிப்பிட்ட சில உணவுகள் புற்றுநோய் செல்களுக்கு ஊட்டமளிக்கலாம் அல்லது அவற்றை எதிர்த்துப் போராடலாம்.
எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவரான டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் சக்திவாய்ந்த 5 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "புற்றுநோய் விகிதங்கள் இளம் வயதினரிடைய அதிகரித்து வருகின்றன. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 உணவுகள் இதோ, இந்த உணவுகளை தான் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் தவறாமல் சாப்பிட ஊக்குவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
1. ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்கு
ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில் சக்தி வாய்ந்த அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளல் உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது குடல் புற்றுநோயைத் தடுக்க உதவும். அதுவும் "இந்த கிழங்கு பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக நிறம் = அதிக பாதுகாப்பு சேர்மங்கள்" என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார்.
2. முளைக்கட்டிய ப்ராக்கோலி மற்றும் மைக்ரோக்ரீன்கள்
முளைக்கட்டிய ப்ராக்கோலி மற்றும் மைக்ரோக்ரீன்கள் புற்றுநோயைத் தடுப்பதற்கான சூப்பர் உணவுகளாக கருதப்படுகின்றன. அதுவும் டாக்டர் சேத்தியின் கூற்றுப்படி, "இவற்றில் சல்ஃபோராபேன் நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பாதைகளைச் செயல்படுத்தும் ஒரு சேர்மமாகும். முற்றிய ப்ரோக்கோலியை விட முளைக்கட்டிய ப்ராக்கோலி மற்றும் மைக்ரோக்ரீன்களில் 20 முதல் 100 மடங்கு அதிகமாக இந்த சேர்மங்கள் உள்ளன."
3. கிவி
"கிவி பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பாலிஃபீனால்கள் போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த கிவி பழத்தை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், அது ஆரம்பகால செல் சேதத்தைத் தடுக்க உதவுவது மட்டுமின்றி, ஏற்கனவே சேதமடைந்துள்ள டிஎன்ஏ-வை சரிசெய்யும் திறனை தூண்டுகின்றன. மேலும் இப்பழம் செரிமானத்தையும், குடலியக்கத்தை சீராக்கவும் உதவுகிறது" என்று டாக்டர் குறிப்பிட்டிருந்தார்.
4. க்ரீன் டீ
"க்ரீன் டீயில் EGCG எனும் எபிகேலோகேச்சின்-3-கேலேட் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகளை அடக்குவதற்கு ஆதரவளிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்று டாக்டர் கூறினார்.
5. பீன்ஸ்
அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் ஆகிய இரண்டும் நிறைந்த ஒரு காய்கறி தான் பீன்ஸ். "1/2 கப் பீன்ஸில் 7-8 கிராம் நார்ச்சத்து உள்ளது. பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 25-38 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை முழுமையாகப் பெறுவதில்லை. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்புடையது. எனவே உங்கள் குடல் நுண்ணுயிரிகளுக்கு உணவளித்து, பெருங்குடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
"புற்றுநோயை ஒரே உணவில் தடுத்துவிட முடியாது. அதை தினசரி பழக்கவழக்கங்களைப் பொறுத்தது. அதுவும் அதிகளவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளை உண்பது, அதிகளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பது, சீரான உணவுப் பழக்கம் போன்றவை காலப்போக்கில் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
