Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன?
Mahalakshmi Rajyog In September 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல யோகங்கள் உருவாகின்றன. முக்கியமாக மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இதில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 05 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் இந்த ராசிக்குள் நுழைந்து செவ்வாயுடன் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகமானது செப்டம்பர் 07 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத நல்ல மாற்றங்களை வாழ்வில் காண்பார்கள். இப்போது செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலைமை படிப்படியாக உயரும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பள்ளது. நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து கையில் பணம் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



