Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை
தற்போது உலகில் கிட்டதட்ட 195 நாடுகள் உள்ளன. இதில் வெகுசில நாடுகள் மட்டுமே பொருளாதாரரீதியாக பணக்கார நாடுகளாக உள்ளன. பெரும்பாலான நாடுகள் வளர்ச்சியடையும் நாடுகளாகவும், பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளாக உள்ளன. நாம் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா விட்டாலும் இந்த உலகம் பணக்காரர்களுக்கானது மட்டுமே.

உலகின் பெரும்பான்மையான கோடீஸ்வரர்கள் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆனால் ஒரு நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் கோடிக்கணக்கான ரூபாய் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட ஒரு கோடீஸ்வர நாடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகின் தனித்துவமான பணக்கார நாடு எது?
UBS குளோபல் வெல்த் அறிக்கை 2026-ன் படி, உலகின் பெரும்பாலான மக்களின் கனவு தேசமான ஐரோப்பாவின் அழகிய சுற்றுலாத் தலமான சுவிட்சர்லாந்து உலகின் செல்வம் மிக்க நாடாகத் திகழ்கிறது. இங்கு குடிமக்களின் சராசரி தனிநபர் வருமானம் 9,10,000 டாலர்கள் (சுமார் 9 கோடி ரூபாய்) ஆகும். அதாவது ஒவ்வொரு சுவிஸ் குடிமகனும் ஒரு கோடீஸ்வரராக வாழ்கிறார்கள். சுவிட்சர்லாந்து உலகின் முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது, இதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டுகிறது. சுற்றுலாத் துறையைத் தவிர, வங்கிச் சேவை, காப்பீடு மற்றும் மேம்பட்ட மருந்துத் தயாரிப்புத் துறை ஆகியவை இந்த நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. மேலும், உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நேர்த்தியான சுவிஸ் கைக்கடிகாரங்கள், பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் ஆகியவற்றிற்கும் சுவிட்சர்லாந்து புகழ் பெற்றதாக விளங்குகிறது.
அமெரிக்காவின் நிலை என்ன?
அறிக்கையின்படி, சராசரி தனிநபர் வருமானத்தில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க குடிமகனின் தனிநபர் வருமானம் 6,69,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6.4 கோடி) ஆகும். ஒட்டுமொத்த ஜிடிபி (GDP) அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தில் திகழ்வதுடன், உலகளாவிய வர்த்தகத்தின் முக்கிய மையமாகவும் விளங்குகிறது. உலகின் மொத்தப் பொருளாதார நடவடிக்கைகளில் சுமார் 26 சதவீதம் அமெரிக்காவை சுற்றி நடப்பதாக அறிக்கைகள் கூறுகிறது. மேலும், அமெரிக்க டாலர் உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள நாடு எது?
UBS பட்டியலின்படி, 655,500 டாலர் தனிநபர் வருமானத்துடன் லக்சம்பர்க் பணக்கார நாடுகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் லக்சம்பர்க், ரசாயனம், ரப்பர், தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குப் பெயர் பெற்றது. அதேசமயம் 616,000 டாலர் சராசரி ஆண்டு வருமானத்துடன் ஆஸ்திரேலியா இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் எரிவாயு ஆகியவற்றை அகழ்ந்தெடுப்பதன் மூலமும் ஆஸ்திரேலியா பெரும் வருவாயை ஈட்டுகிறது.
இந்த பட்டியலில் உள்ள ஆசிய நாடு எது?
இந்தப் பட்டியலில் 4 மற்றும் 6-வது இடத்தில் ஆசியாவை சேர்ந்த ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உள்ளன. ஆசிய நாடான ஹாங்காங் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 400 பில்லியன் டாலராகவும், தனிநபர் வருமானம் 648,000 டாலராகவும் உள்ளது. அதேசமயம், சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் 527,000 டாலராக உள்ளது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 73 சதவீத பங்களிப்பை வழங்கும் நிதிச் சேவைகள் துறை அங்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 டிரில்லியன் டாலர் என்ற பிரம்மாண்டமான அளவில் உள்ளது. இருப்பினும், சராசரி தனிநபர் வருமானம் வெறும் 2,700 டாலராக மட்டுமே உள்ளது, இது இந்தியாவில் நிலவும் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவின் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையாகும்.



Click it and Unblock the Notifications

