குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?

தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அதில் இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் அனைத்து நாடுகளின் மக்கள்தொகையும் ஏறுமுகத்தில் இருக்கும்போது சில நாடுகளின் மக்கள்ததொகை கவலையளிக்கும் விதமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

Singapore Wants To Pay Parents Over 52 Lakhs Per Child to Boost Birth Rate

மக்கள் தொகையில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் நாடுகள் தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க தொடர்ந்து மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிங்கப்பூரும் தனது குடிமக்களுக்கு ஒரு நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசு தனது நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்ய ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையை மாற்றியமைக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் அந்நாடு, ஒவ்வொரு குழந்தைக்கும் அது பிறந்தது முதல் 17 வயது வரை சுமார் 70,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் 52 லட்சம் ரூபாயை) தொகையை அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்கத் தயாராகி வருகிறது.

சிங்கப்பூர் பிரதமரின் அறிவிப்பு

சிங்கப்பூரின் தேசிய தின பேரணி' (National Day Rally) நிகழ்வில் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த திட்டத்தை அறிவித்தார். "குடும்பங்களுக்கு நாம் ஆதரவளிக்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அடிப்படை மாற்றம்" என்று அவர் இதனை விவரித்தார். இந்த புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைப் பிறப்பின்போது S$10,000 மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்படும்.; அத்துடன், குழந்தை 17 வயதை எட்டும்போது உயர்கல்விக்கான இதே போன்றதொரு பரிசுத் தொகை கிடைக்கும். மேலும், கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தைப் பராமரிப்புச் செலவுகளுக்கான கூடுதல் மானியங்களும், பிரைமரி செல்லும் குழந்தைகளுக்கான குறைந்த கட்டணச் சலுகைகளும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோருக்கான குழந்தை பராமரிப்பு ஆதரவு

சிங்கப்பூர் அரசு குழந்தை பராமரிப்பு விடுப்பையும் விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது. மேலும் குழந்தைப் பராமரிப்பு செலவின் ஒரு பகுதியை முதலாளிகள் ஏற்கும் நிலைக்குப் பதிலாக, முழுச் செலவையும் அரசாங்க நிதியுதவி மூலம் ஏற்கும். பெற்றோரை அல்லது எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களைப் பணியமர்த்துவது, வேலை கொடுப்பவர்களுக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளை இந்த மாற்றம் குறைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

பெற்றோரை அல்லது எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களைப் பணியமர்த்துவது, வேலையளிப்பவர்களுக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளை இந்த மாற்றம் குறைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

மானிய விலையில் வழங்கப்படும் பொது வீட்டுவசதிக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்களுக்கு, ஒதுக்கீட்டு வாக்கெடுப்புகளிலும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு குழந்தை அதிகமாக இருக்கும்போது அவர்களின் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இது பற்றி வோங் கூறுகையில் "இன்று, எல்லா இடங்களிலும் உள்ள குடும்பங்கள் பெருகிவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன." இந்த நிலையில் "ஒவ்வொரு குடும்பமும் தெரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: நீங்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்தால், அரசாங்கம் உங்களுடன் துணை நிற்கும். நாங்கள் மேலும் பல ஆண்டுகளுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குவோம்." என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது

கருவுறுதல் விகிதத்தில் சிங்கப்பூர் நீண்டகாலமாக சரிவை சந்தித்து வருவதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த மாதம் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 496 சிங்கப்பூர் குடிமக்களிடம் 'யூ-கவ்' (YouGov) நடத்திய ஆய்வில், அவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒருவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதும், எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தங்களை ஊக்குவிக்க அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று சுமார் 30 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

கருவுறுதல் விகிதம் 1.41-ஆக இருந்தபோது, ​​2001-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது 'பேபி போனஸ்' (Baby Bonus) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த விகிதம் 1.2-ஆகக் குறைந்தது, கடந்த ஆண்டு இது 0.87 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதில் சிங்கப்பூர் ஏன் சிரமப்படுகிறது?

வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட பொதுவாகக் காணப்படும் ஒரு சவாலை சிங்கப்பூர் அரசாங்கமும் எதிர்கொள்கிறது.அதாவது, குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் செலவுகள், வீட்டு வசதி தொடர்பான நெருக்கடிகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவை மக்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருந்து பின்வாங்கச் செய்யலாம். நவீன வேலைச் சூழலின் தேவைகளால், பலருக்கும் குடும்ப வாழ்க்கைக்குச் செலவிடப் போதுமான நேரமோ அல்லது ஆற்றலோ இருப்பதில்லை என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.

விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு எவ்வளவு என்பதை வோங் குறிப்பிடவில்லை; இருப்பினும், "இது நாம் மேற்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த முதலீடுகளில் ஒன்று என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 26, 2026, 18:41 [IST]
Desktop Bottom Promotion