பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Pavakkai Poriyal Recipe In Tamil: வாரம் ஒருமுறை உணவில் பாவக்காயை சேர்த்து வருவது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கசப்புத்தன்மையால் பாவக்காயை சாப்பிடமாட்டார்களா? அத்தகையவர்களை பாகற்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாவக்காயை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்யுங்கள். இப்படி பொரியல் செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Pavakkai Poriyal How To Make Bittergourd Stir-fry Recipe

உங்களுக்கு பாவக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாவக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய பாவக்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - சிறிய நெல்லிக்காய் அளவு (சிறிது நீரில் ஊற வைத்தது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பாவக்காயை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போய், எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு பச்சை வாசனை போய், நீர் வற்றும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பாவக்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 26, 2026, 14:58 [IST]
Desktop Bottom Promotion