Latest Updates
-
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
Mars Transit In Punarpoosam Nakshatra On 02 September 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.

இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் செவ்வாய் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.
அதுவும் செப்டம்பர் 02 ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் விளைவு அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும்.
குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் நல்ல உயர்வும், வேலையில் வெற்றிகளும் கிடைக்கும். இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கும் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
தனுசு
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே சிறப்பாக இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு எடுத்த வேலை ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றையும் சிறப்பாகவும், வெற்றிகரகமாகவும் செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


