Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
Amla Juice Benefits In Tamil: நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க அதிகம் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, உடலில் பல நல்ல மாற்றங்களைக் காணலாம். அதற்கு நெல்லிக்காயை தினமும் அப்படியே கடித்து சாப்பிடலாம் அல்லது அவற்றை அரைத்து சாறாக எடுத்தும் அருந்தலாம்.

சிலர் நெல்லிக்காயை ஜூஸாக தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவார்கள். அதுவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த பானத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் பிரகாஷ் மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 1000 மிகி வரை வைட்டமின் சி எடுக்கலாம். அதில் ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கொண்டால், 150-200 மிகி வைட்டமின் சி இருக்கும். எனவே தாராளமாக ஒரு நாளைக்கு 2-3 நெல்லிக்காயை கொண்டு அரைத்து ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். ஆனால் ஜூஸாக குடிப்பதை விட பழமாக சாப்பிடும் போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும். இருப்பினும் மென்று சாப்பிடும் போது சிலருக்கு பற்கூச்சம் ஏற்படும் என்பதால், நிறைய பேர் ஜூஸாக குடிக்க விரும்புகின்றனர்." என்று கூறினார்.
நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்
* "நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய இருப்பதால் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தினால் வரக்கூடிய பிசிஓடி (PCOD), பிஎம்ஓஸ் (PMOS) போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வரலாம்.
* மன அழுத்தத்தினாலும், உட்காயங்களாலும் தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அப்ப நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்கள், தலைமுடி உதிர்வது நின்றுவிடும். பரம்பரை வழுக்கைக்கு முடி முளைக்குமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.
* முக்கியமாக HsCRP அதிகம் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, நன்கு கட்டுப்பாட்டில் இருக்கும். CRP என்பது ஒருவித புரோட்டீன். இது உடலில் எங்கு வீக்கம் அல்லது கிருமி தொற்று ஏற்பட்டாலும், நமது கல்லீரல் CRP புரதத்தை இரத்தத்தில் அதிகளவில் சுரக்கும்.
* ஏழு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. அந்த சோதனை 550 பேரை கொண்டு பரிசோதனை செய்ததில், இந்த நெல்லிக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்துக் கொண்டு வருபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ராலில் 15 பாயிண்ட்டும், ட்ரைகிளிசரைடுகளில் 20 பாயிண்ட்டும் குறைந்துள்ளது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
* உடல் பருமனாலும், ஹைப்போ தைராட்டிசம் போன்ற பிரச்சனையாலும், மலச்சிக்கல் இருந்தால், நெல்லிக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வரும் போது, அந்த மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.
நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் எடுக்கலாம்?
* நெல்லிக்காய் + இஞ்சி - இந்த காம்பினேஷனில் ஜூஸை எடுத்துக் கொண்டால், கூடுதலாக செரிமானத்திற்கு உதவி புரியும்.
* நெல்லிக்காய் + வெள்ளரிக்காய் - நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் போது நீருக்கு பதிலாக வெள்ளரிக்காயை சேர்த்து எடுத்தால், அதில் உள்ள நீர்ச்சத்தே உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
* நெல்லிக்காய் + கேரட் - நெல்லிக்காயுடன் கேரட்டை சேர்த்து ஜூஸ் தயாரிக்கும் போது, கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன், கரோட்டினாய்டுகள் எல்லாம் சேர்ந்து கண்களுக்கு மிகவும் நல்லது.
யாரெல்லாம் நெல்லிக்காய் ஜூஸ் எடுக்கக்கூடாது?
நெல்லிக்காய் ஜூஸ் அல்லது பீட்ரூட் ஜூஸ் என எதுவாக இருந்தாலும், அதில் கால்சியம் ஆக்சலேட் அதிகமாக உள்ளது. எனவே ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், இவற்றைத் தவிர்ப்பது நல்லது" என்று கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
