Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க..
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Navpancha Yog On Raksha Bandhan 2026: வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ரக்ஷா பந்தன். இந்நாளில் தங்கைமார்கள் அண்ணனுக்கு ராக்கி என்னும் கயிற்றினை கட்டி அன்பை பரிமாறிக் கொள்வார்கள். என்ன தான் இது ஒரு வடஇந்திய பண்டிகையாக இருந்தாலும், அண்ணன் தங்கைக்கான பண்டிகை என்பதால் இந்தியா முழுவதும் இது கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வருகிறது.

ஜோதிடத்தின் படி, இந்நாளில் மிகவும் மங்களகரமான நவபஞ்ச யோகம் உருவாகிறது. அதுவும் இந்த யோகமானது கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனின் நிலையால் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான யோகம் என்பதால் இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அதில் சிலருக்கு எதிர்பாராத அளவில் நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. குறிப்பாக நல்ல நிதி நன்மைகளும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ரக்ஷா பந்தன் நாளில் செவ்வாய் சந்திரனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஒரு இடத்தில் பணம் சிக்கியிருந்தால் அந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத சில நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்
ரக்ஷா பந்தன் நாளில் செவ்வாய் சந்திரனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். சிலருக்கு பல புதிய வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், பங்குச் சந்தையில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
ரக்ஷா பந்தன் நாளில் செவ்வாய் சந்திரனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. சட்ட விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சொந்தமாக தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



