Latest Updates
-
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம் -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது!
Guru Aditya Rajyog In Cancer After 12 Years: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார்.

அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது இந்த குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த கடக ராசிக்கு சூரியன் ஜூலை 16 ஆம் தேதி நுழையவுள்ளார். இதன் விளைவாக இந்த சூரிய பெயர்ச்சியால் கடக ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை நிகழவுள்ளது.
இதன் காரணமாக மிகவும் மங்களகரமான குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தையும், வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஆன்மீனத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நிதி நிலைமை வலுவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். கடன் தொல்லை தீரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். பல புதிய வழிகளின் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துவாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் உள்ள பண பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். திட்டமிட்ட வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் சமுக அந்தஸ்து உயரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப சூழல் இனிமையாக மாறும். சட்ட பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


