Latest Updates
-
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Trigrahi Yog On 16 July 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்போது கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் மட்டுமின்றி, அவற்றினால் உருவான யோகங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் ஒரு அற்புதமான யோகம் கடக ராசியில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

ஏற்கனவே கடக ராசியில் தேவர்களின் குருவான குரு பகவானும், கிரகங்களின் இளவரசனான புதனும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த ராசியில் குரு, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையை மேம்படுத்த மேற்கொள்ளும் முற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி, நிறைய பணத்தை சேமிக்க முடியும். திட்டமிட்டபடி எந்த வேலையையும் செய்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் வெற்றிகளும், செல்வமும் குவியும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இக்காலத்தில் சோம்பேறித்தனத்தை கைவிட்டு முழு முயற்சியுடன் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




