Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Gajkesari Rajyog on 14 July 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார்.

இப்படிப்பட்ட சந்திரன் வருகிற ஜூலை 14 ஆம் தேதி தனது சொந்த ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு இருப்பதால், குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது ஜூலை 16 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைவார்.
ஜோதிடத்தில் கஜகேசரி ராஜயோகம் செல்வம், மகிழ்ச்சி, வசதி, பதவி, கௌரவம் போன்றவற்றை தரக்கூடியது. அதோடு தொழில் முன்னேற்றம், வெற்றி, தைரியம், வலிமை, புத்திசாலித்தனம் போன்றவற்றையும் தரும். இப்படிப்பட்ட யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
கஜகேசரி ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கஜகேசரி ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டு எதை செய்தாலும் வெற்றி கிட்டும். இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளை செய்யும் போது புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
சிம்மம்
கஜகேசரி ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். தொழிலில் முன்னேறுவதற்கு கிடைக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உங்களின் பேச்சும், நடத்தையும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகள் வலுவடையும். இருப்பினும் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
கஜகேசரி ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் முன்னேற்ற கதவுகள் திறக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மீனம்
கஜகேசரி ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் புதிய மாற்றங்களைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் உறவு வலுவடையும். மன அழுத்தம் குறையும். இருப்பினும் செலவுகளை சற்று குறைக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



