Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Shani Vakra Peyarchi 2026: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சனி பகவான் மீன ராசியின் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதலாக வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.
சனி பகவானின் இந்த வக்ர பயணத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் ஒரு புதையல் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் எதிர்பாராத மாற்றங்களை காணலாம். நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இக்காலமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க உகந்த காலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியிடத்தில் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். சிலர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

