Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ருசியான ஒரு சமையலை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், காய்கறிகளும் இருந்தால், அவற்றைக் கொண்டு பன்னீர் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணியை பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்துக் கொடுக்கலாம். இந்த பிரியாணி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பன்னீர் - 400 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
பிரியாணி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1 கப்
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* ஊற வைத்த பன்னீர்
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* தண்ணீர் - 2 கப்
* பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக்கி
எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சாட் மசாலாவை சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு,
ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3
நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள்,
மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி, புதினா
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 1/2
மணிநேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு சேர்த்து
கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு 15 நிமிடம் அப்படியே தம் போட
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பன்னீர்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications