Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சிம்பிளான... பன்னீர் மசாலா
பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
இன்று நாம் காணவிருப்பது பன்னீர் மசாலா ரெசிபியைத் தான். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதோடு பன்னீரை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கால்சியம், புரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளன. இத்தகைய பன்னீர் அடிக்கடி உணவில் சேர்ப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

இப்போது பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லி தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் தக்காளி சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 7-8 நிமிடம் வேக வைக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் தயிர் சேர்த்து கிளறி, கிரேவி அதிகம் வேண்டுமானால் 1/2 கப் நீரையும் சேர்த்து, சுவைப்கேற்ப உப்பு தூவி கிளறிவிட்டு வேக வைக்கவும்.
* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
