Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
August Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான மற்றும் சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஆகஸ்ட் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக கலவையான பலன்கள் கிடைக்கும். சனி வக்ரமாக இருப்பதால், எந்த ஒரு வேலையையும் செய்ய ஏற்கும் முன் முழுமையாக ஆராய்வது அவசியம். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். ஆனால் அந்த பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் வெற்றி பெற வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சனி வக்ரமாக இருப்பதால், முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். திடீரென்று எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, வருமானம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். இதனால் சேமிப்பு குறைவாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக சவாலானதாக இருக்கும். இம்மாதத்தில் அதிக போராட்டமும், கடின உழைப்பும் தேவைப்படலாம். இருப்பினும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதுவும் உடனே கிடைக்காமல் சற்று தாமதமாகலாம். நிதி ரீதியாக சாதாரணமாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்வில் துணையுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். இம்மாதத்தில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது சவானதாக இருக்கும். வெற்றி பெற அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வருமானம் குறைவாக இருக்கும். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது வேலை மற்றும் தொழில் ரீதியாக சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எதிர்பார்த்ததை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை இம்மாதம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி ரீதியாக செல்வம் சேர்ப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மாதத்தின் நடுப்பகுதியில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் திடீர் சவால்களும், பிரச்சனைகளும் ஏற்படலாம். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பார்கள். வருமானத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மாணவர்கள் இம்மாதத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக சவாலானதாக இருக்கும். பணியிடத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செய்யும் வேலைகளை பொறுப்புடனும், நேர்மையாகவும் செய்யுங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல்களை தவிர்க்க வேண்டும். வருமானத்தில் குறைவு மற்றும் நிறைய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் முதலீடுகளை புத்திசாலித்தனமாக மேற்கொள்ள வேண்டும். காதல் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செய்யும் வேலையை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். பண வரவில் தடையை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றங்களை காணலாம். இம்மாதத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையையும், புரிதலையும் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறவுகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடும். இம்மாதம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். செவ்வாயின் நிலையால் வருமானம் குறையலாம். நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பது கடினமாக இருக்கும். காதல் உறவுகள் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் நடத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் வேலையில் கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைக்காமல் எந்த வெற்றியும் கிடைக்காது. இம்மாதத்தில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சொத்து தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் சிரமங்களை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
