மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா?

மனித வரலாற்றில் பல தனித்துவமான அரசர்கள் இருந்துள்ளனர். சில அரசர்கள் தங்கள் மனிதாபிமானமிக்க செயல்களுக்காகவும், சிறப்பான நிர்வாகத்திற்காவும் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றனர். சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக அவர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்காகவும், கொடுஞ்செயல்களுக்காகவும் நினைவுகூரப்படுகிறார்கள்.

Top 10 Most Ruthless Kings in History

இந்த அரசர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்கள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. மனித நாகரிகத்தையே அச்சத்தில் ஆழ்த்திய தங்களின் கொடூரம், தீய செயல்கள் மற்றும் விசித்திரமான பழக்கங்களால் வரலாற்றில் இடம் பெற்ற இரக்கமற்ற அரசர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விலாட் டெபெஸ்

இந்த அரசரைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் குடலைக் கிழித்தல் மற்றும் முகத்தில் குத்திக் கொல்லுதல் போன்ற கொடூரமான தண்டனைகளை வழங்கிய ஒரு சைக்கோ மன்னராக வரலாறு அவரை நினைவுகூர்கிறது. மனித வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சம்பவம் என்னவென்றால், அவர் தனது தலைநகருக்கு வெளியே 20,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் குத்திக் கொன்று, அவர்களின் தோலை உரித்து, தலை துண்டித்தல், கண்களைப் பறித்து, தூக்கிலிட்டு என எண்ணிலடங்கா முறையில் சித்திரவதை செய்து கொலை செய்தார்.

ஐவன் IV ரஷ்யா

இவர் வரலாற்றின் ஒரு கொடிய அரசனாகக் குறிப்பிடப்படுகிறார். ஏனெனில், மக்களைக் கூர்மையான கம்பத்தில் குத்தித் தண்டிப்பதில் அவர் அதீத விருப்பம் கொண்டிருந்தார். மேலும், சித்திரவதை செய்வதற்கும் தன் கண்முன்னே கொல்வதற்கும் ஏதுவாக, தினமும் சுமார் 500 முதல் 1000 பேர் வரை அவரது படைகளால் அவரது அரசவைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அடால்ப் ஹிட்லர்

கடந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான ஆட்சியாளராக கருதப்படுபவர் ஜெர்மனியின் ஆட்சியாளராக இருந்த அடால்ப் ஹிட்லர். அவர் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்ததோடு, யூதர்களுக்கு எதிரான பாசிசக் கொள்கைகளையும் முன்வைத்தார். ஜெர்மனியில் யூதர் அல்லாத மக்களிடையே அச்சம் மற்றும் வெறுப்புணர்வை விதைப்பதன் மூலம் அவர் ஒட்டுமொத்த ஜெர்மனியையும் ஒன்றிணைத்தார். அவரது கொள்கைகள் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டதுடன், 'ஹோலோகாஸ்ட்' என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்கும் வழிவகுத்தன; இதன் விளைவாக சுமார் 60 லட்சம் யூதர்களும், போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத மேலும் 50 லட்சம் பேரும் உயிரிழந்தனர்.

கிங் ஃபிரோன்

எகிப்து வரலாற்றின் மிகவும் சுயநலமிக்க, ஆணவம் கொண்ட மற்றும் கொடுங்கோல் ஆட்சியாளராகத் திகழ்ந்தவர் இவர்தான். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அவர், மக்கள் தன்னை ஒரு கடவுளாக நம்பி வழிபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அவ்வாறு செய்ய மறுத்தவர்களுக்குக் மிகவும் கொடூரமான தண்டனைகளை வழங்கினார்.

மாசிடோனியாவின் மூன்றாம் அலெக்சாண்டர்

அலெக்ஸாண்டர் என்ற பெயருக்கு ஏற்ப தனது ஆட்சியின் பெரும்பகுதியை ஆசியா முதல் வடமேற்கு ஆப்பிரிக்கா வரையிலான இராணுவப் படையெடுப்புகளிலேயே அவர் கழித்தார். ஒருவேளை, அவரது வாழ்நாள் முழுவதையும் போர்க்களத்திலேயே கழிக்க வைத்த அதீத லட்சிய வேட்கையும், அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் அடிக்கடி வெளிப்பட்ட கட்டுப்படுத்த முடியாத கோபமும் அவரை ஏராளமான மக்களை கொல்ல வழிவகுத்தது.

ஜோசப் ஸ்டாலின்

வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான ஆட்சியாளராக அவர் அழைக்கப்படுகிறார். ஏனெனில், எந்தவொரு சர்வாதிகாரியையும் விட அவர் வானளாவிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். தனது 29 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், சொந்த நாட்டு மக்கள் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்க அவர் காரணமாக இருந்தார்.

லியோபோல்ட் II

லியோபோல்ட் II பெல்ஜியத்தின் மன்னராக இருந்தார், மேலும் காங்கோ சுதந்திர அரசை இரக்கமின்றி மிருகத்தனமாகச் சுரண்டியதற்காக நன்கு அறியப்பட்டார். ஏனெனில், அவரது கட்டாய உழைப்புக் கொள்கையின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான காங்கோ மக்கள் இறந்தனர்.

அட்டிலா தி ஹன்

மனித வரலாற்றின் கொடிய ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் அழைக்கப்படுகிறார். அவரது கடைசிப் படையெடுப்புகள் வரலாற்றின் மிகவும் மோசமான போர்களாக நினைவுகூரப்படுகின்றன, ஏனெனில் அவர் கால் மீது படையெடுத்து, அவர் சென்ற வழியெங்கும் இருந்த கிராமங்கள் அனைத்தையும் அடியோடு அழித்தார். அவர் படையெடுக்கும் இடங்களில் ஒருவரையும் விட்டுவைக்கும் வழக்கம் அவருக்கு இருந்ததில்லை.

செங்கிஸ்கான்

மங்கோலியர்களின் அரசரான அவர் சிறந்த இராணுவ மேதை, அரசியல் ராஜதந்திரி மற்றும் இரக்கமற்ற கொடூரமான அரசர் என அறியப்பட்டவர். தனது ஒவ்வொரு போருக்குப் பிறகும், குள்ளமானவர்களுக்கு உயிர்வாழ உரிமை இல்லை என்று கூறி, ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குக் குறைவான உயரம் கொண்டவர்களை அவர் கொன்று குவித்ததாக ஒரு கதை உண்டு.

மாக்சிமிலியன் ரோபெஸ்பியர்

அவர் தனது தன்னிச்சையான மற்றும் கணிக்க முடியாத செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர். ஏனெனில் அவர் தன் வாழ்நாள் முழுவதும் யாரையும் நம்பவில்லை, மேலும் எந்தவொரு விசாரணையுமின்றி சந்தேகத்திற்குரிய அனைவரின் தலைகளையும் துண்டித்தார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர் சுமார் 50 லட்சம் மக்களின் தலைகளைத் துண்டித்தார்.

Story first published: Friday, July 24, 2026, 10:54 [IST]
Desktop Bottom Promotion