Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Mercury Transit In Virgo On 07 September 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், ஒருவரது ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால், அந்நபர் தொழிலில் கொடிகட்டி பறப்பதோடு, புத்திசாலியாகவும், படிப்பில் கெட்டிக்காரராகவும், பேச்சாற்றல் மிக்கவராகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் புதன் செப்டம்பர் 07 ஆம் தேதி, அதாவது இன்று ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் மதியம் 1.33 மணியளவில் நுழைகிறார். இந்த கன்னி ராசியில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை இருப்பார். சுமார் 1 வருடம் கழித்து புதன் தனது சொந்த ராசிக்கு மீண்டும் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது புதன் கன்னி ராசிக்கு செல்வதால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இருப்பினும் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் காதல் உறவுகள் வலுவடையும். காதலித்து வருபவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். அரசு தொடர்பான வேலைகளில் உள்ள தடைகள் நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சில நற்செய்திகளைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூக தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சால் கடின சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை செலுத்த வேண்டும். பணியிடத்தில் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. விருந்தினரின் வருகையால் வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் யாருக்கும் இக்காலத்தில் பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக புதிய வாகனம் வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுகு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்த பல சதிகளை செய்யலாம். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்படுவது நல்லது. உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். கூட்டு தொழில் செய்ய நினைத்திருந்தால், இக்காலத்தில் அதை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான வேலைகள் சிறப்பாக முடிவடையும். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




