Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
Jupiter Moon Conjunction In Cancer Make Gajkesari Rajyog 2026: ஜோதிடத்தில் மனத்தின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் தான் இருப்பார். கடக ராசியின் அதிபதியான சந்திரன் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்த சந்திரன் செப்டம்பர் 07 ஆம் தேதி தனது சொந்த ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் இந்த கடக ராசியில் ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியாக கருதப்படும் குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சந்திர பெயர்ச்சியால் கடக ராசியில் அற்புதமான யோகம் உருவாகிறது. முக்கியமாக கடக ராசியில் சந்திரனும், குரு பகவானும் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைகின்றனர்.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், நான்கு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தை விட அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் முடிக்க முடியாமல் நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலும் வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ்வார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள். எழுத்து, ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, நல்ல வெற்றியையும் பெறுவார்கள். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


