கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!

Mars Transit In Cancer On 18 September 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட. தற்போது இந்த செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

Mars Transit In Cancer On 18 September 2026 These Zodiac Signs Luck Will Shine

இந்நிலையில் செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியானது செவ்வாய் நீச்சமடையும் ராசியாகும். அதாவது இந்த ராசியில் செவ்வாய் நுழைந்தால், பலவீனமாக இருப்பார். ஆனால் செவ்வாய் கடக ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் குரு பகவான் இருப்பதால், அவர் செவ்வாயின் நீச்சத்தை முறித்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

இப்படி நீச்சபங்க ராஜயோகம் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது கடக ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

செவ்வாய் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை வேலையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் எந்த ஒரு அவரச முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, September 6, 2026, 22:16 [IST]
Desktop Bottom Promotion