இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Lucky Zodiac Signs After Age 40: அனைவருக்குமே வாழ்க்கை சிறப்பாக இருந்துவிடுவதில்லை. சிலருக்கு வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், அந்த கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்காமல், தோல்வியை சந்திப்பார்கள்.

People Born Under These 3 Zodiac Signs Luck Shines After 40 Years

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு சிலர் வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியையும், நிதி முன்னேற்றத்தையும் காண்பார்கள். அதுவும் 40 வயதைக் கடந்த பின் பலருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதைக் காணலாம். இதற்கு இவர்கள் இளம் வயதில் பல சவால்களையும் தடைகளையும் சந்தித்தாலும், வயது அதிகரிக்க அதிகரிக்க அனுபவமும் தன்னம்பிக்கையும் வளர்ந்து, அதிர்ஷ்டமும் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஜோதிடத்தில் 40 வயதுக்கு மேல் தான் சனி மற்றும் குருவின் தாக்கம் அதிகமாகிறது. இந்த காலத்தில் கர்ம பலன் கிடைக்க தொடங்கும். கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் நேரம் இதுதான். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு 40 வயதிற்கு பின் செல்வத்தையும், புகழையும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். என்ன தான் செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரனை அதிபதியாக கொண்டிருந்தாலும், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இவர்கள் பெரும்பாலும் இளம் வயதில் தங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவதில்லை. இதனால் மிகவும் விரக்தியடைவார்கள்.

ஆனால் 40 வயதுக்கு பிறகு சுக்கிர திசை, குரு பார்வை சேர்ந்து தன யோகத்தை கொடுக்கும். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் காரணமாக இவர்கள் குறைந்த முயற்சியில் மகத்தான செல்வத்தையும், சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் கௌரவமான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ரராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் மற்றவர்களின் உதவியை நாடி நிறைய நேரத்தை வீணடிப்பார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எதிர்பார்த்த வெற்றியையும் முன்னேற்றத்தையும் காண முடியாமல் சிரமப்படுவார்கள்.

ஆனால் 40 வயதிற்கு பின் இவர்கள் தங்களின் உண்மையான வலிமையை உணர்வார்கள். அதாவது மறைந்து கிடந்த திறமை இந்த வயதில் வெளியே வரும். இதனால் தங்களின் புத்திசாலித்தனத்தையும், திறன்களையும் முழுமையாக பயன்படுத்தி, தங்கள் தொழிலில் உச்சத்தை அடைந்து, எதிர்பாராத அளவில் செல்வத்தை குவிப்பார்கள்.

மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் எதை தொட்டாலும் தோல்வியையும், வாழ்வின் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாமல் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். இருப்பினும் ஒருபோதும் இவர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவதில்லை.

ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ, 40 வயதிற்கு பின் சனியின் ஆதரவு முழுவதும் கிடைக்கும். இதன் மூலம் 40 வயதிற்கு பின் எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றியைக் காண்பதோடு, தொழில் வளர்ச்சி, சொத்து சேர்க்கை, அரசு வேலை, மரியாதை என அனைத்தையும் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, September 6, 2026, 17:37 [IST]
Desktop Bottom Promotion