Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க...
Morning Drinks To Clear Stomach In Tamil: நீரை விட சிறந்த பானம் வேறு எதுவும் இல்லை என்றாலும், வெறும் நீரை மட்டும் குடிப்பது என்பது சற்று கடினம். ஆனால் அந்த நீருடன் ஒருசில பொருட்களை சேர்த்து குடிக்கும் போது, உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். அதுவும் நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? மலச்சிக்கல், வாய்வு தொல்லை போன்றவற்றால் சிரமப்படுகிறீர்களா?

அப்படியானால் அப்போது வெறும் நீரை மட்டும் குடித்தால் எந்த பலனும் கிடைக்காது. அதற்கு பதிலாக அந்த நீருடன் ஒருசில மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை சேர்த்து காலையில் எழுந்ததும் குடிப்பதன் மூலம், வயிறும், செரிமான மண்டலமும் சுத்தமாகும். கீழே வயிற்றை சுத்தம் செய்யவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் எந்த பொருட்களை நீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலுமிச்சை மற்றும் தேன்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, வயிற்றில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுகிறது. அதுவும் இந்த பானம் செரிமான நொதிகளைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிப்பதோடு, வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை நீக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம் சருமமும் பொலிவு பெறும்.
2. நெய்
ஒரு ஸ்பூன் நெய்யை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும் போது குடல் சுத்தமாகி, கழிவுகளும் எளிதில் வெளியேற்றப்படுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குடலியக்கத்தை சீராக்குகிறது. ஆனால் இந்த பானத்தை பிபி உள்ளவர்கள் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உட்கொள்ளும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
3. சைலியம்
சைலியம், இதை இசப்கோல் என்றும் அழைப்பர். இந்த சைலியத்தை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும் போது, மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் சைலியத்தில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இது குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, வயிற்றை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.
4. சோம்பு மற்றும் சீரகம்
சிறிது சோம்பு அல்லது சீரக விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை காலையில் குடித்து வரும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். அதுமட்டுமல்லாமல் அது அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் வாத, பித்த தோஷங்களையும் சமநிலைப்படுத்தும்.
எனவே நண்பர்களே! நீங்கள் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தாலோ அல்லது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தாலோ, வெறும் நீரை குடிப்பதற்கு பதிலாக மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கலந்த நீரை குடித்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
