Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?

Ganesh Chaturthi 2026: இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கியப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. இந்த வருட விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த பண்டிகை இது இந்தியா முழுவதும் பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் ஊர்வலக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள், தேதி, சடங்குகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Ganesh Chaturthi 2026 Date Muhurat Significance and Rituals

2026 விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது?

2026-ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா, செப்டம்பர் 14, 2026 திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி 'பத்ரபத' மாதத்தில் வரும் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதியில் அதாவது வளர்பிறையின் நான்காம் நாள் இந்த விழா வருவதால், இது 'பத்ரபத சதுர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வருடன் சதுர்த்தி திதியானது செப்டம்பர் 14 அன்று காலை சுமார் 7:06 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 15 அன்று காலை சுமார் 7:44 மணி வரை நீடிக்கிறது. இதனாலேயே, சூரிய உதயத்தின்போது பூஜை செய்யப்படாமல், நண்பகலில் குறிப்பிட்ட நேரத்தில் பூஜை செய்யப்படுகிறது.

'விநாயக உத்சவம்' என்று அழைக்கப்படும் இந்த பத்து நாள் திருவிழா, செப்டம்பர் 14-ல் தொடங்கி, அனந்த சதுர்த்தசியன்று நடைபெறும் விநாயகர் ஊர்வலத்துடன் செப்டம்பர் 25, 2026 வெள்ளிக்கிழமையன்று நிறைவடைகிறது.

2026 விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கான முகூர்த்த நேரம்

செப்டம்பர் 14 ஆம் தேதியன்று நண்பகல் வேளையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஏனெனில், விநாயகப் பெருமான் நண்பகல் வேளையில்தான் அவதரித்தார் என்று இந்து மத நூல்கள் குறிப்பிடுகின்றன. டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான வட இந்திய நகரங்களில், 2026 செப்டம்பர் 14 அன்று நண்பகல் முகூர்த்த நேரம் தோராயமாக காலை 11:02 மணி முதல் மதியம் 1:31 மணி வரை அமைகிறது.

விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம்

விநாயகர் சதுர்த்தி விழா, தடைகளை தகர்த்தெறியும் மற்றும் ஞானம், அறிவு, புதிய தொடக்கங்களின் கடவுளாக வணங்கப்படும் யானை முகக் கடவுளான விநாயகரின் பிறப்பைக் கொண்டாடுகிறது. இதனால்தான் இந்து மக்கள் எந்த சுப நிகழ்வைத் தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்குகின்றனர். வீடுகளில் தனிப்பட்ட பூஜையாகத் தொடங்கும் இந்த விழா, பல இடங்களில் பொது வழிபாட்டுப் பந்தல்களாக விரிவடைகிறது.குறிப்பாக மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊர்வலங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதி மக்களும் ஒன்றிணைகிறார்கள்.

வீட்டில் எப்படி விநாயகரை வழிபடுவது?

இந்த விழா வருவதற்கு முன் பக்தர்கள் தங்கள் வீடுகளையோ அல்லது பூஜை செய்யும் இடங்களையோ சுத்தம் செய்து அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடட்டத்திற்கு தயாராகிறார்கள். அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையில் விநாயகர் சிலை நிறுவப்படுகிறது. பின்னர் 'பிராண பிரதிஷ்டை' சடங்கு நடைபெறுகிறது. இதன் மூலம் விநாயகப் பெருமானின் தெய்வீக அருள அந்தச் சிலையில் எழுந்தருளுவதாகக் கருதப்படுகிறது. இந்த பூஜையில் மந்திரங்களை உச்சரித்தல் மற்றும் மலர்கள், அருகம்புல், பழங்கள், தேங்காய், இனிப்புகள் ஆகியவற்றை அர்ப்பணித்தல் ஆகியவை அடங்கும். விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பாகக் கருதப்படும் 'கொழுக்கட்டை' விநாயகருக்குப் படைக்கப்படும் முக்கிய நைவேத்தியமாகும்.

விழாவின் நிறைவு

படைப்பு மற்றும் அழிவின் சுழற்சியை உணர்த்தும் வகையில், சிலையை நீரில் முறைப்படி கரைக்கும் நிகழ்வுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைகிறது. முழுமையாகப் பத்து நாட்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுபவர்களுக்கு, முக்கிய விசர்ஜன் நாளான 'அனந்த சதுர்தசி' 2026-ஆம் ஆண்டில் செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

Story first published: Monday, September 7, 2026, 18:43 [IST]
Desktop Bottom Promotion