Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Mercury Direct In Gemini On 24 July 2026: ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் ஒரு ராசியில் குறுகிய நாட்களில் பயணிக்கக்கூடியவர். சொல்லப்போனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

இப்படிப்பட்ட புதன் ஜூலை 07 ஆம் தேதி வக்ர நிலையில் மிதுன ராசியை நோக்கி பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் இந்த புதன் ஜூலை 24 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் சற்று பலவீனமாக இருக்கும். இதனால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில், செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் இன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார். புதனின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இப்போது மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறலாம். செலவுகளை கட்டுப்படுத்தினால், சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பண பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். தொழிலதிபர்கள் ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த தவறான புரிதல்கள் தீர்ந்து, உறவுகள் வலுவடையும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் தாக்கம் சற்று ஆழமாக இருக்கும். அதுவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எழுத்து, ஊடகம், மார்கெட்டிங், வணிகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் இனி குறையும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை மன அழுத்தத்தை சந்தித்து வந்திருந்தால், இனி மன நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. சமூக வட்டம் விரிவடையும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். பழைய இலக்கு ஒன்றை இக்காலத்தில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதல் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டும். எதிலும் முதலீடு செய்வதற்கு முன் நன்கு யோசித்து செய்ய வேண்டும். தொழில் ரீதியாக இக்காலம் சுமாராக இருக்கக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மேம்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். எதிரிகளை வெற்றி காண்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். எழுத்து, ஊடகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் சிறக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




