Latest Updates
-
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Monsoon Face Packs In Tamil: பெரும்பாலானோர் கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் தான் சருமத்திற்கு நிறைய பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் மழைக்காலத்தில் சருமத்தை கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இந்த காலத்தில் மழைப்பொழிவின் காரணமாக சருமத்தில் அதிகமாக வறட்சி எதுவும் ஏற்படாது மற்றும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இதன் காரணமாக சருமத்திற்கு என்று தனி பராமரிப்பு கொடுக்கமாட்டார்கள்.

ஆனால் உண்மையில் மழைக்காலமும் குறிப்பிட்ட சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் . சொல்லப்போனால் இக்காலத்தில் ஏற்கனவே உள்ள சரும பிரச்சனைகள் மேலும் மோசமாகக்கூடும். இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், மழைக்காலத்திலும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு சில ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். இப்போது மழைக்காலத்திலும் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 முட்டை, 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஃப்ரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்விக்க வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இதற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. தேன், லாவெண்டர் எண்ணெய் மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிது லாவெண்டர் எண்ணெய் மற்றும் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. சந்தனம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பாதி எலுமிச்சையின் சாற்றினை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications