Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வட இந்தியாவில் புகழ் பெற்ற புனிதமான சிராவண மாதம் ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாளான ஜூலை 29 அன்று அதிகாலை 4:56 மணிக்கு, செல்வம், ஆடம்பரம் மற்றும் உறவுகளின் அதிபதியான சுக்கிரன் கிரகம், பூர நட்சத்திரத்திலிருந்து உத்திர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்திலேயே நிலைபெற்றிருப்பார்.

இந்த கிரக மாற்றம் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நான்கு ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனால் அவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றிகளைக் குவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்குச் சுக்கிரன் அதிபதியாக இருப்பதால், இந்த கிரகப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களையும் துணிச்சலாக செய்வதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்ட முடியும்.
உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். இந்த நட்சத்திர பெயர்ச்சி உங்களின் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். நீங்கள் புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால், நீங்கள் அதில் வெற்றி பெறலாம். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான மாதமாக இருக்கும்.
மிதுனம்
இந்தக் கிரகப் பெயர்ச்சி மிதுன ராசியினருக்குப் புது ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக்கூடும். நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பணிகள் இறுதியாக முன்னேற்றமடையும், அதேவேளையில், திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளில் இணக்கமான சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர்கள் மனதில் இருந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வரும். கல்வித் துறையில், அவர்கள் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பான உறவை பராமரிக்கலாம். இது உங்கள் அவர்களின் லட்சியங்களை சிரமமின்றி அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதரரீதியாகவும் இந்த காலகட்டம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். வாழ்க்கைத் துணை தேடுபவர்களுக்குப் பொருத்தமான துணை கிடைக்கலாம். அதேவேளையில், ஏற்கனவே உள்ள உறவுகள் மேலும் வலுப்பெறலாம். இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.
உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் புதிய வேலையைப் பெறலாம், அதேபோல் அவர்களின் தற்போதைய வேலையை மாற்றவும் முடியும். வேலை செய்யுமிடத்தில் அதிகாரிகளின் உதவியையும், ஆதரவையும் பெறலாம். இதுதவிர அவர்களின் துறையில், பல சாதனைகளை செய்ய முடியும்.
பொருளாதாரரீதியாக அவர்கள் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். அவசர முடிவுகளை எடுக்காமல் கவனமாக இருங்கள். ஏனெனில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறுகளுக்கு வழிவகுக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்க கவனமாக இருங்கள். அதேபோல, சிறிய லாபம் தரும் திட்டங்களில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
