Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது..
Yama Transit In Thiruvonam Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், வேறு பிற கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் நவகிரகங்களில் இல்லாத ஒரு முக்கியமான கிரகம் தான் புளூட்டோ என்னும் யமன். கிரகங்களில் யமன் மோசடி, மர்மம், அழிவு, பாவங்கள், ஊழல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
நவீன ஜோதிடத்தின் படி, யமனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட யமன் ஒரு ராசியில் சுமார் 17-18 ஆண்டுகள் வரை இருக்கும். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றும். அப்படி யமனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் தெரியும்.

அந்த வகையில் மார்ச் 03 ஆம் தேதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் ஜூலை 13 ஆம் தேதி வரை யமன் இருப்பார். இப்படி யமன் நட்சத்திரத்தை மாற்றுவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் 9 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட பல வேலைகள் வெற்றிகரமாக இப்பெயர்ச்சியால் நடக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் மனக்கவலைகள் நீங்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களின் படிப்பில் உள்ள தடைகள் நீங்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். படைப்பாற்றல் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
