Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
March Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மார்ச் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
March Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் மார்ச் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மார்ச் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மார்ச் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! மார்ச் மாத தொடக்கத்தில் புதிய வருமான வாய்ப்புக்கள் உருவாகும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகலாம். புதிய நட்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். திடீர் பயணங்கள் அல்லது செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இம்மாதத்தில் அங்காரக யோகம் உருவாகியிருப்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மன அழுத்தத்தாலும் சிரமப்படலாம். திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் மாத இறுதியில் அது சரியாகிவிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாஙம். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மார்ச் மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சம்பள உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். காதல் கல்யாணம் வரை செல்லும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மிகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மார்ச் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். காதலர்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையை கடைப்பிடிக்காவிட்டால், காதலில் விரிசல் ஏற்பட்டுவிடும். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப சூழல் படிப்படியாக மேம்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். செலவுகளும், ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரித்து, கவலைகளை உண்டாக்கும். தொழிலில் ஆரம்பத்தில் லாபத்தைப் பெறாவிட்டாலும், பின்னர் மேம்படும். காதல் உறவுகள் சாதகமாக இருக்கும். சுயநலமானது தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மார்ச் மாதமானது சற்று தொந்தரவாக இருக்கும். இம்மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வயிறு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சற்று விழிப்புடன் இருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம். இம்மாதத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணியிடத்தில் தேவையற்ற அரசியலில் ஈடுபடுவதற்கு பதிலாக, வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக படித்த பின் போட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் உங்களின் பொறுமை சோதிக்கப்படலாம். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் மெதுவாகவே கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செல்வத்தை குவிப்பீர்கள். செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இம்மாதத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும், குறைவான பலன்களையே பெறக்கூடும். கோபத்தையும், அவசரத்தையும் தவிர்க்க வேண்டும். வணிகர்களுக்கு மாதத்தில் தொடக்கத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆர்வத்தை இழக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதனால் பல துறைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆளுமை மேம்படும். பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மார்ச் மாதம் பொறுமை தேவை. சில இடங்களில் பொறுத்துப் போக வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மாத இறுதியில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மார்ச் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமாக இருங்கள். புதிய வணிக முடிவுகளை இம்மாதத்தில் எடுக்காதீர்கள். நிதி நிலைமை சுமாராக இருக்கும். மாதத்தின் முதல் வாரத்தில் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மார்ச் மாதம் சற்று சவாலானதாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேலையில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இருப்பினும் கவனமாக இருங்கள். வியாபாரிகள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். காதல் உறவுகள் மேம்படும். இருப்பினும், அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் எழும். இந்நிலையில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள். உணவு மற்றும் தூக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதிக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications














