Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுட்ட மிளகாய் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரம் வரை கெட்டுப்போகாது..
Sutta Milagai Thakkali Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தக்காளி சட்னி செய்வீர்களா? தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். அதுவும் மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சுட்டு தக்காளி சட்னி செய்யும் போது, அது இன்னும் வித்தியாசமான சுவையில் பிரமாதமாக இருக்கும்.
இப்படி ஒருமுறை சுட்ட மிளகாய் தக்காளி சட்னியை செய்தால், அதை 1 வாரம் என்ன 1 மாதம் வரை கூட வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் போன்றும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு இந்த சுட்ட மிளகாய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட மிளகாய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுட்டு அரைப்பதற்கு...
* சிவப்பு மிளகாய் - 10
* பூண்டு - 10 பல்
* உப்பு - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டு பற்களை நெருப்பில்
சுட்டு எடுத்து, ஜாரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்கி, பின்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, தக்காளி
மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, மஞ்சள் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிய நன்கு
கொதிக்க வைத்து, 1 கைப்பிடி கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான சுட்ட மிளகாய் தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications